Sai Pallavi Makeup Secret: சாய் பல்லவி அடிக்கடி பயன்படுத்தும் இரண்டே மேக்கப் பொருட்கள் பற்றி தெரியுமா?

Published : Mar 04, 2025, 06:39 PM IST

நடிகை சாய் பல்லவி தன்னுடைய திரைப்படங்களில் கூட அதிக மேக்கப் பயன்படுத்துவது இல்லை. அப்படி பட்ட இவருடைய பையில் இருக்கும் 2 மேக்கப் பொருட்கள் பற்றி தெரியுமா?  

PREV
18
Sai Pallavi Makeup Secret: சாய் பல்லவி அடிக்கடி பயன்படுத்தும் இரண்டே மேக்கப் பொருட்கள் பற்றி தெரியுமா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சாய் பல்லவி மேக்கப் இல்லாமல் இயற்கையான அழகுடன் மின்னுவதையே அதிகம் விரும்புபவர். முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும்,  கதை பிடித்திருந்தால் மட்டுமே அந்த படங்களில் நடிக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டும் சரி, இந்த வருடமும் சரி இவருக்கு மிகவும் சிறப்பானதாகவே அமைந்தது.
 

28
அமரன் படத்தின் அசாத்திய வெற்றி :

கடந்த ஆண்டின் இறுதியில், தீபாவளி ரிலீசாக சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வெளியான அமரன் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் ரூ.350 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு பெரிய அளவில் பாராட்ட பட்டது. சென்னையை சேர்ந்த ராணுவ வீரர் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் தான் சாய் பல்லவி நடித்திருந்தார்.
 

38
சாய் பல்லவி நடித்து வெளியான தண்டேல் திரைப்படம் ரூ.100 கோடி வசூல் கொடுத்தது

இதை தொடர்ந்து தெலுங்கில் இந்த ஆண்டு துவக்கத்திலேயே சாய் பல்லவிக்கு ஹிட் கொடுத்தது 'தண்டேல்' திரைப்படம். மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்தில் நாகசைதன்யா ஹீரோவாக நடித்திருந்தார். மேலும் இந்த படம் நாக சைதன்யாவுக்கு 100 கோடி வசூலை பெற்று தந்தது.

48
தொடர்ந்து தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவி

தொடர்ந்து தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் சாய் பல்லவி, தற்போது இந்தியிலும் கால் பதித்துள்ளார். அதன்படி வரலாற்று காவியமாக உருவாகும் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில், ராமராக ரன்பீர் கபூர் நடிக்க சாய் பல்லவி சீதையாக நடிக்கிறார். ராவணனாக கன்னட நடிகர் யஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

58
சாய் பல்லவி பல விஷயங்களில் வித்தியாசமாகவே உள்ளார்.

சாய் பல்லவி பல விஷயங்களில் மற்ற நடிகைகளிடம் இருந்து வித்தியாசமாகவே உள்ளார். உடை, மேக்கப், பட தேர்வு உள்ளிட்ட விஷயங்களை உதாரணமாக கூறலாம். கஷ்டப்பட்டு நடிக்க தயாராக இருந்தாலும், கவர்ச்சி காட்டுவதற்கு சாய் பல்லவி தயாராக இல்லை. அதே போல் தன்னுடைய படங்களில் கூட எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் தான் நடிப்பார்.

68
சாய் பல்லவி தனது மேக்கப் பற்றி பேசியுள்ளார்

சாய் பல்லவி தனது மேக்கப் பற்றி முன்பு ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அந்த வீடியோவில், சாய் பல்லவி பயன்படுத்தும் இரண்டு மேக்கப் பொருட்கள் பற்றி பேசி யோருந்தார். சாய் பல்லவி மேக்கப்பிற்காக இரண்டு பொருட்களை மட்டுமே அதிகம் பயன்படுத்துவாராம். சாய் பல்லவி தனது முகத்திற்கு தனியாக க்ரீம்கள் எதுவும் பூசுவதில்லை. ஆனால் அவர் பையில் ஒரு ஐலைனர், மாய்ஸ்சரைசர் க்ரீம் கண்டிப்பாக எஇருக்கும் என கூறியுள்ளார்.
 

78
ஹேர் ஸ்டைலில் மட்டுமே அடிக்கடி ஏற்படும் மாற்றம்

அதே போல் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்றாப்போல் முடியின் ஸ்டைலை மட்டும் மாற்றி கொண்டே இருப்பாராம்.  அதில் பெரும்பாலும் அவரது ஹேர் ஸ்டைல் சுருள் முடியாகவே இருப்பதை நாம் பார்க்கிறோம். சாய் பல்லவி இரவு நேரங்களில் ஷூட்டிங் செய்யும் போது மட்டும் ஐலைனர் பயன்படுத்துகிறார். இது கண்கள் அழகாக தெரிவதோடு கவர்ச்சியாகவும் மாற்றும் என்பதால். 

88
முகத்தை மட்டுமே கழுவி வந்து நடித்த சாய் பல்லவியின் படங்கள்

கார்கி, விராட பருவம் போன்ற படங்களில் சாய் பல்லவி எந்த மேக்கப்பும் போடவில்லையாம். முகம் கழுவி துடைத்துவிட்டு ஷூட்டிங்கிற்கு வந்ததாக சாய் பல்லவி வேடிக்கையாக கூறி இருந்தார். மேலும் சாய்பல்லவி கவர்ச்சி,  மேக்கப் போடுவதை சிறந்த கதாபாத்திரம் மட்டுமே முன்னணி நடிகையாக மாற்றும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories