தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவற்றின் மறுஉருவம் அஜித் என்றும் சொல்லலாம். எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி, திரையுலகில் கால்பதித்து, இன்று ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ளார். அதே போல் இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
26
'குட் பேட் அக்லீ' ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் :
இந்நிலையில் கடந்த மாதம் அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ.100 கோடி வசூலில் இணைந்தது. இதை தொடர்ந்து, அஜித் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள, 'குட் பேட் அக்லீ' திரைப்படம், ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அதே போல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் காதலித்து திருமணம் செய்தவர்களில் நடிகர் அஜித் குமாரும் ஒருவர். அமர்க்களம் படத்தில் நடிகை ஷாலினியுடன் நடிக்கும் போது இருவரும் ஒருவருக்கொருவர் பிடித்துப் போக காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.அதன்படி இந்த நட்சத்திர ஜோடிகளின் திருமணம் கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி நடந்தது.
46
காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா மற்றும் ஆத்விக்
இவர்களின் காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா மற்றும் ஆத்விக் என்று 2 பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் தான் அஜித் குமாரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பற்றி பிரபல பிஆர்ஓ நிகில் முருகன் சில முக்கியமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: நான் அஜித் குமார் மற்றும் ஷாலினியின் திருமண வரவேற்பிற்கு பிஆர்ஓவாக இருந்தேன்.
அஜித்தின் திருமணம் ரிசப்ஷன் பற்றி பேசிய நிகில் முருகன்
சென்னையிலுள்ள தாஜ் கன்னிமேரா ஹோட்டலில் தான் இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுவாகவே விஐபிகளின் கார் டிரைவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றால் அவர்கள் விஐபிகளை இறக்கிவிட்டு விட்டு கார் பார்க்கிங்கில் தான் வெயிட் பண்ணுவார்கள். அதே நிலை தான் அஜித் திருமணம வரவேற்பு நிகழ்ச்சியிலும் இருந்தது. டிரைவர்கள் யாரும் சாப்பிடமாட்டார்கள். அதற்கு நேரமும் இருக்காது.
66
டிரைவர்கள் சாப்பிட ரிஸப்ஷனையே மாற்ற சொன்ன அஜித்:
அப்படியிருக்கும் போது தான் நான் ஒரு யோசனை சொன்னேன். டிரைவர்களுக்கு உணவு பார்சல் மற்றும் தண்ணீர் பாட்டில் கொடுக்கலாமா என்று கேட்டேன். அவரும் நல்லவொரு ஐடியா என்றார். ஆனால், அதற்கு ஹோட்டல் நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை. அதற்கு அஜித் இதற்கு எந்த ஹோட்டலில் அனுமதி தருகிறார்களோ அந்த ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மாற்றி வைக்கலாம் என்றார். முதலில் மறுப்பு தெரிவித்த தாஜ் ஹோட்டல் நிர்வாகம் பின்னர் அனுமதி கொடுத்தது. அதன் பிறகு விஐபிகளின் கார் டிரைவர்களுக்கும் நாங்கள் உணவு பார்சல் மற்றும் தண்ணீ பாட்டில் கொடுத்தோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.