பின்னர் வெற்றிகளை காணாத வக்கீலாக சித்தரிக்கப்படும் காலி வெங்கட்டின் உதவியுடன் கார்கி எவ்வாறு தனது தந்தையை மீட்கிறார் என்பதே இந்த படத்தின் கதையாகும். இதில் சாய் பல்லவியுடன் காளி வெங்கட், ஆர்.எஸ். சிவாஜி , கவிதாலயா கிருஷ்ணன், சரவணன், சுதா என பல நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டு உரிமையை சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றியது. இதற்கான அறிவிப்பையும் சூர்யா வெளியிட்டு இருந்தார். தற்போது படத்தில் வசூல் குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் மொத்தம் 4 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.