S. A. Chandrasekhar
நடிகர் விஜய் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். விஜய் திரை உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக கால் ஊன்றி உள்ளார். இவர் நடித்த பல படங்களும் அதிக வசூலை கடந்துள்ளது. தொடர்ந்து வெற்றி படங்களை தந்து தமிழக ரசிகர்களை அதிகப்படுத்திக் கொண்ட விஜய் தற்போது டோலிவுட் பக்கம் நேரடியாக களமிறங்கி உள்ளார். அதன்படி வாரிசு படம் உருவாகி வருகிறது. அங்கு பிரபல இயக்குனராக இருக்கும் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு...actress Poonam Bajwa : மத்திய அழகை அம்சமாய் காட்டி...கிறங்கடிக்கும் பூனம் பஜ்வா
அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜயை அரசியல் தலைவராக்கும் எண்ணத்தில் முன்னெடுப்புகளை செய்து வந்தார் எஸ்.ஏ. சந்திரசேகர். அவரது தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விஜய்க்கு பிடிக்காததால் தனது தந்தைக்கு எதிராக கோர்ட் வரை சென்று விட்டார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பும் ஏற்பட்டு பல நாட்களாக சந்திக்கவே இல்லை என்று கூட கூறுகிறார்கள்.
சமீபத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் தனது பிறந்த நாளை கொண்டாடினார் அந்த பிறந்தநாள் விழாவை அடுத்து சதய விழாவும் நடைபெற்றது. ஆனால் இந்த விழாக்களுக்கு விஜயோ அவரது மனைவியோ, பிள்ளைகளோ யாருமே கலந்து கொள்ளவில்லை.இதனால் பிரபல நடிகராக இருக்கும் விஜய் என்னதான் மனக்கசப்பு இருந்தாலும் தனது தந்தையின் விழாவிற்கு வராத இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.