தளபதி விஜய் உடன் கூட்டணி எப்போது? - ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கானின் கூல் ரிப்ளை இதோ

Published : Nov 05, 2022, 03:10 PM IST

டுவிட்டரில் #AskSRK என்கிற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடிய ஷாருக்கான், நடிகர் விஜய்யுடன் பணியாற்றுவது குறித்தும் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

PREV
13
தளபதி விஜய் உடன் கூட்டணி எப்போது? - ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கானின் கூல் ரிப்ளை இதோ

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர பதான், டுங்கி போன்ற படங்களும் அவர் கைவசம் உள்ளது. இதில் பதான் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ந் தேதி ரிலீசாக உள்ளது. அதேபோல் ஜவான் படமும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது.

23

ஷாருக்கானுக்கு உலகமெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஷாருக், அவ்வப்போது அவர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இன்று டுவிட்டரில் #AskSRK என்கிற ஹேஷ்டேக் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்தார்.

இதையும் படியுங்கள்... ஆரம்பமே அமர்களம்... பிரம்மாண்டமாக நடந்த ‘லால் சலாம்’ படத்தின் பூஜை - வைரலாகும் போட்டோஸ் இதோ

33

அப்போது ரசிகர் ஒருவர், எப்போதெல்லாம் நீங்களும் விஜய்யும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பார்க்கும்போது, நீங்கள் இருவரும் ஒருவர்மீது ஒருவர் நல்ல மதிப்பு வைத்துள்ளீர்கள் என்பது தெரியும். விஜய் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன? எப்போது உங்கள் இருவரையும் ஒரே படத்தில் பார்க்க முடியும் என கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஷாருக்கான், விஜய் மிகவும் கூலானவர். படம் நடக்கும்போது நடக்கும். அவர்களுக்காக இருந்தால் அவர்கள் செய்வார்கள் என பதிலளித்துள்ளார். விஜய்யின் தளபதி 67 படத்தில் ஷருக்கான் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக அண்மையில் சில தகவல்கள் பரவி வந்த நிலையில், அவர் இத்தகைய பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இயக்குனருடன் மோதலா.. சிவகார்த்திகேயனின் மாவீரன் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்? - வெளியான உண்மை பின்னணி

Read more Photos on
click me!

Recommended Stories