ஆரம்பமே அமர்களம்... பிரம்மாண்டமாக நடந்த ‘லால் சலாம்’ படத்தின் பூஜை - வைரலாகும் போட்டோஸ் இதோ

Published : Nov 05, 2022, 02:26 PM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள லால் சலாம் படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

PREV
18
ஆரம்பமே அமர்களம்... பிரம்மாண்டமாக நடந்த ‘லால் சலாம்’ படத்தின் பூஜை - வைரலாகும் போட்டோஸ் இதோ

லால் சலாம் படத்திற்கு இன்று சென்னையில் பூஜை போடப்பட்டது. அதில் லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

28

லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

38

இப்படத்தை நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்க உள்ளார். இதற்கு முன்னர் இவர் 3 மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

48

கிரிக்கெட் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

58

லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க உள்ளனர். இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாவர்.

68

லால் சலாம் படத்தின் மூலம் ஐஸ்வர்யா இயக்கத்தில் முதன்முறையாக நடிக்க உள்ளார் ரஜினிகாந்த். இதில் அவர் நடிக்கும் காட்சிகள் 20 நிமிடங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

78

இப்படத்தில் கதையின் நாயகர்களாக விஷ்ணு விஷாலும், விக்ராந்த்தும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம், அவர்கள் இருவரும் நன்கு கிரிக்கெட் விளையாடத் தெரிந்தவர்கள் ஆவர்.

88

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி முடித்து, அடுத்தாண்டு படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories