இயக்குனருடன் மோதலா.. சிவகார்த்திகேயனின் மாவீரன் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்? - வெளியான உண்மை பின்னணி

Published : Nov 05, 2022, 01:33 PM IST

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தின் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

PREV
14
இயக்குனருடன் மோதலா.. சிவகார்த்திகேயனின் மாவீரன் ஷூட்டிங் திடீரென நிறுத்தப்பட்டது ஏன்? - வெளியான உண்மை பின்னணி

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசான பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அவர் அடுத்த படத்தின் மூலம் கம்பேக் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு காரணம் அவரது அடுத்த படமான மாவீரன்-ஐ இயக்கி வருவது மண்டேலா படத்துக்காக தேசிய விருது வென்ற இயக்குனரான மடோன் அஸ்வின்.

24

அதுமட்டுமின்றி இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்க உள்ளார். மேலும் இதில் வில்லனாக பிரபல இயக்குனர் மிஷ்கின் நடித்து வருகிறார். மாவீரன் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது வரை இப்படத்தின் ஷூட்டிங் 40 சதவீதம் முடிந்துள்ளது.

இதையும் படியுங்கள்... மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சும் வேலைக்கு ஆகல..! முதல் நாள் வசூலில் மரண அடி வாங்கிய காஃபி வித் காதல்

34

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மாவீரன் படத்தின் ஷூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென நிறுத்தப்பட்டது. இயக்குனர் மடோன் அஸ்வினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாகத் தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

44

ஆனால் உண்மையில் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதற்கு காரணமே வேற. அது என்னவென்றால், சென்னையில் தற்போது கனமழை பெய்து வருவதால் தான் மாவீரன் பட ஷூட்டிங்கை நிறுத்தி வைத்துள்ளார்களாம். வருகிற திங்கட்கிழமை முதல் மீண்டும் ஷூட்டிங் தொடங்க உள்ளதாம். இதன்மூலம் இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே சண்டை என்பது வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்... வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் ரிலீஸ் டைம் எப்போது? விஜய்யின் ரொமாண்டிக் போஸ்டருடன் வந்த மாஸ் அப்டேட்

Read more Photos on
click me!

Recommended Stories