இவர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகிய நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்தது. சமீபத்தில் வெளியான வலிமை படத்தில் காலா பட நாயகி ஹீமா குரேஷியும், அஜித்தும் போலீஸ் அதிகாரிகளாக நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து அஜித் 61 படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். ஐதராபாத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.