விக்ரம் வரவால் தியேட்டர்களில் இருந்து தூக்கப்படும் அபாயம்! OTT ரிலீஸ் தேதியை அறிவித்து டான் படக்குழு அதிரடி

Published : May 28, 2022, 12:49 PM IST

DON OTT release date : ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த படம் இரண்டே வரங்களில் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட உள்ளதை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

PREV
14
விக்ரம் வரவால் தியேட்டர்களில் இருந்து தூக்கப்படும் அபாயம்! OTT ரிலீஸ் தேதியை அறிவித்து டான் படக்குழு அதிரடி

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான படம் டான். அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கி இருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்த இப்படத்தில் சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, மிர்ச்சி விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

24

அனிருத் இசையமைத்திருந்த இப்படம் கடந்த மே 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரிலீசானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 2 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

34

வருகிற ஜூன் 3-ந் தேதி கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. டான் படத்தின் ஓட்டம் இந்த வாரத்துடன் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது. இதன்காரணமாக பெரும்பாலான திரையரங்குகளில் இருந்து டான் படம் விரைவில் தூக்கப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

44

இதனால் சுதாரித்துக் கொண்ட படக்குழு, டான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் 10-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த படம் இரண்டே வரங்களில் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட உள்ளதை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

இதையும் படியுங்கள்... பிகினிலாம் வேண்டாம்... கவர்ச்சி காட்ட இதுவே போதும் - பீச்சில் பளீச் என தொடையழகை காட்டி கிக் ஏற்றும் சிவானி

Read more Photos on
click me!

Recommended Stories