2 வருட கஷ்டம்; 250 நாட்கள் போராட்டம்: வலியும், மகிழ்ச்சியும் நிறைந்த காந்தாரா சாப்டர் 1; மேக்கிங் வீடியோ வெளியீடு!

Published : Jul 22, 2025, 07:05 PM IST

Kantara Chapter 1 Making Video Released in Tamil : ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

PREV
15
காந்தாரா சாப்டர் 1 படப்பிடிப்பு நிறைவு

Kantara Chapter 1 Making Video Released in Tamil : சலார், கேஜிஎஃப், ராஜகுமாரா மற்றும் காந்தார போன்ற சாதனை படைத்த படங்களுக்கு பின்னால் இருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு நிறுவனமாக திகழும் நிலையில் இன்று காந்தாரா சாப்டர் 1 படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் போது அவர்களது கடின உழைப்பும், படத்திற்காக அவர்கள் தங்களை அர்ப்பணித்த விதமும் தான் நம் கண் முன் வந்து நிற்கிறது. எப்படியும் இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் சாதனை படைக்கும் என்று நம்பப்படுகிறது.

25
ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1

படத்தின் பின்னணியில் உள்ள காவிய தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இந்த வீடியோ வழங்குகிறது. காந்தாரா சாப்டர் 1 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது.

35
காந்தாரா சாப்டர் 1 மேக்கிங் வீடியோ

கடந்த 3 ஆண்டுகள் போராட்டம், படத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட விதம், ஆயிரக்கணக்கானவர்கள் படத்திற்கான தயாரிப்பில் ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்த மேக்கிங் வீடியோ - நடிகர் மற்றும் இயக்குநரான ரிஷப் ஷெட்டியின் கதை சொல்லலை வரையறுக்கும் ஆர்வம் மற்றும் துல்லியத்திற்கு சமர்ப்பணமாக அமைந்திருக்கிறது.

45
காந்தாரா: சாப்டர் 1 - ஹோம்பலே ஃபிலிம்ஸ்

'காந்தாரா : சாப்டர் 1 ' என்பது ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்களில் மிகவும் லட்சியமான திரைப்பட முயற்சிகளில் ஒன்றாகும். என்னதான் இந்தப் படம் இதற்கு முன்னதாக பல படங்களை தயாரித்திருந்தாலும் படத்தின் பின்னணியில் பணியாற்றிய படைப்புத் திறன் மிக்க குழுவில் இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் - ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் தினேஷ் வங்காளன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் சக்தி வாய்ந்த காட்சி மொழி மற்றும் உணர்வு பூர்வமான கதையை நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர்.

55
ஹோம்பாலே ஃபிலிம்ஸ், ரிஷப் ஷெட்டி

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்கால் என்று பேன் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகிறது. அதே தருணத்தில் அதன் கலாச்சார மையத்தில் வேரூன்றி பல்வேறு மொழிகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களையும் சென்றடையும். 'காந்தாரா : சாப்டர் 1 'உடன் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை தொடர்ந்து கடந்து செல்கிறது. நாட்டுப்புற கதைகள், மக்களின் நம்பிக்கை மற்றும் அற்புதமான சினிமா திறமைசாலிகள் ஒன்றிணைந்து.. கொண்டாடும் ஒரு ஆழமான அனுபவத்தை வழங்கும் என இந்தப் படம் உறுதியளிக்கிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories