சாமுண்டீஸ்வரியை குறி வைத்த சந்திரகலா – மாமியாரை காப்பாற்றிய கார்த்திக் – கார்த்திகை தீபம் அப்டேட்!

Published : Jul 22, 2025, 06:13 PM IST

Karrthigai Deepam 2 Indraya Epsiode : கார்த்திகை தீபம் 2 சீரியலில் சந்திரகலாவின் டார்க்கெட் இப்போது அவரது அக்காவின் பக்கம் திரும்ப கார்த்திக் கடின போராட்டத்திற்கு பிறகு மாமியாரை காப்பாற்றுகிறார்.

PREV
13
சாமுண்டீஸ்வரியை பழி தீர்க்க திட்டம் போட்ட சந்திரகலா

Karrthigai Deepam 2 Indraya Epsiode : நாளுக்கு நாள் சீரியல் மீதான ஆர்வமும், ஆசையும் அதிகரித்த வண்ணம் உள்ளது, சன் டிவி, விஜய் டிவி, ஜீ5 டிவி என்று ஒவ்வொரு சேனல்களிலும் ரேட்டிங்கை பிடிக்க ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதிலேயும், ஒரு சீரியலானது முதல் சீசனை வெற்றிகரமாக முடித்து இப்போது 2ஆவது சீசனை தொடங்கி ஒளிபரப்பு செய்து வருகிறது.

பொதுவாக சீரியல்களில் சினிமாவைப் போன்று இல்லாமல் பார்ட் 2 சீரியல் என்றால் சின்னதான ஒரு மாற்றத்துடன் ஒளிபரப்பு செய்யப்படும். உதாரணத்திற்கு முதல் சீசனில் ஹீரோ பணக்காரராக இருந்தால் 2ஆவது சீசனில் வேலைக்காரனாக இருப்பார். இதுவே முதல் சீசனில் ஹீரோயின் வேலைக்காரியாக இருந்தால் 2ஆவது சீசனில் பணக்காரங்களாக இருப்பார். முதல் சீசன் கிராமத்து கதை என்றால் 2ஆவது சீசன் சிட்டி கதை இல்லையென்றால் சிட்டி கதையிலிருந்து கிராமத்து கதை. இதுதான் காலங்காலமாக சீரியல்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

23
துர்காவை தப்பிக்க வைக்கும் சந்திரகலா

இதே போன்ற டெக்னிக் தான் ஜீ5 கார்த்திகை தீபம் 2 சீரியலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் முதல் சீசனில் கார்த்திக்கை பணக்காரராக காட்டினாங்க. இப்போது 2ஆவது சீசனில் அவரை வீட்டு வேலைக்காரனாக டிரைவராக காட்டுறாங்க. இப்போது அவருக்கு திருமணமும் நடந்தது வீட்டோட மாப்பிள்ளையாக இருக்கிறார். இந்த நிலையில் தான் கார்த்திகை தீபம் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்து தேர்தலுக்கு நாமினேஷன் செய்துவிட்டு வந்தார்.

அதோடு சிவனாண்டியிடம் சென்று துர்காவை வைத்து தான் சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்த முடியும். அதனால், நான் துர்காவை வீட்டை விட்டு ஓட வைக்கிறேன் என்று திட்டம் போடுகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது. இதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் ரேவதியின் ரொமான்ஸ் காட்சிகள் ஒளிபர்பபு செய்யப்படுகிறது. இதில், ரேவதியிடம் அடுத்து ஆஸ்திரேலியா எப்போது போக போற என்று கேட்க ரேவதியோ கொஞ்ச நாள் ஆகும் என்கிறார்.

33
கார்த்திகை தீபம் 2 சீரியல்

மேலும், கார்த்திக்கை கட்டிலில் வந்து படுக்க சொல்ல கார்த்திக் வேண்டாம் என்கிறார். அடுத்து சந்திரகலா துர்காவிடம் நடப்பதையெல்லாம் சொல்லி வீட்டை விட்டு ஓடி போய்ட்டு என்று உசுப்பேற்றி விடுகிறாள். அடுத்த நாள் துர்கா வீட்டை விட்டு வெளியேற சந்திரகலா சிவனாண்டிக்கு போன் செய்து இதை வைத்து சாமுண்டீஸ்வரியை அவமானப்படுத்தலாம் என்று ஐடியா கொடுக்கிறாள்.

அடுத்து இருவரையும் சிவனாண்டி ஆட்கள் துரத்த துர்கா நவீன் கோவிலுக்குள் தஞ்சமடைகின்றனர். சிவனாண்டி கோவிலுக்குள் வைத்து கதவை அடைகிறான். எல்லாருக்கும் தகவல் சொல்லி ஒன்று கூட்டுகிறான்.

மேலும் சாமுண்டீஸ்வரையும் கோவிலுக்கு வர வைத்து கதவை திறக்க முயற்சிக்க கார்த்திக் கோவிலுக்குள் புகுந்து துர்கா நவீனை தப்பிக்க வைக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை பார்த்து மகிழுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories