ரிஷப் ஷெட்டி, இயக்கி ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் 800 கோடி வசூல் அள்ளி வெற்றிநடைபோட்டு வரும் நிலையில், அப்படக்குழு புது அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
ரிஷப் ஷெட்டி நாயகனாகவும் இயக்குநராகவும் ஜொலித்த காந்தாரா சாப்ட்ர் 1 படத்தின் ஆங்கிலப் பதிப்பு வெளியாகத் தயாராகி வருகிறது. இப்படம் அக்டோபர் 31 அன்று திரையரங்குகளுக்கு வரும் என்பதை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாளே பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேசமயம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்டமான வசூலை ஈட்டி வருகிறது. 20 நாட்களில் காந்தாரா சாப்ட்ர் 1, 800 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது.
24
ஆங்கிலத்தில் வெளியாகும் காந்தாரா சாப்டர் 1
இதுவரை கண்டிராத ஒரு த்ரில்லிங் அனுபவத்தை ரிஷப் ஷெட்டி காந்தாரா மூலம் ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். தென்னிந்திய நடிகை ருக்மணி வசந்தும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் ஜெயராமும் நடித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த அக்டோபர் 2ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
34
ஹிட் அடித்த காந்தாரா சாப்டர் 1
அரவிந்த் எஸ் காஷ்யப் இப்படத்திற்கு அழகான விஷுவல் ட்ரீட் கொடுத்துள்ளார். காந்தாராவில் ரிஷப் ஷெட்டி நடித்த சிவா என்ற கதாபாத்திரத்தின் தந்தையின் கதையை காந்தாரா சாப்ட்ர் 1 சொல்கிறது. இப்படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டி இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். சூப்பர் டூப்பர் ஹிட்டான காந்தாராவின் முதல் பாகம் வெறும் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ.400 கோடி வசூலை வாரிக் குவித்தது.
காந்தாராவின் முதல் பாகம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் இப்படத்தின் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், ஆங்கிலம் மற்றும் துளு பதிப்புகளை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர், அவை அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றன. ரிஷப் ஷெட்டி திரைக்கதை எழுதி இயக்கிய காந்தாரா சாப்ட்ர் 1-ஐ விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் ஆங்கிலத்தில் ரிலீஸ் ஆக உள்ளதால், ஆயிரம் கோடி வசூலையும் எட்ட வாய்ப்பு உள்ளது.