Rishab Shetty Kantara Chapter 1 OTT Release Update : உயிரோட்டமான காட்சிகளுடன், ரசிகர்களை திரையங்குகளில் சிலிர்க்க வைத்த 'காந்தாரா சேப்டர் 1' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமையாளராக இருக்கும் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'காந்தாரா'. மிக குறைவான பட்ஜெட்டில் பழங்குடி மக்களின் கடவுள் நம்பிக்கை குறித்து அழுத்தமாக பேசிய படம். இந்த படம் கன்னட திரையுலகை தாண்டி, மற்ற மொழி ரசிகர்களாலும் அதிகம் ரசிக்கப்பட்ட படமாக அமைந்தது.
எனவே, முதல் பாகத்தின் ப்ரீகுவெலாக உருவான படம் தான் 'காந்தாரா சேப்டர் 1'. இந்த பாகத்தை, இயக்குனர் ரிஷப் ஷெட்டி சுமார் ரூ.120 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக இயக்கி இருந்தார். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, ப்ரீகுவெலாக உருவான 'காந்தாரா 1' படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் வெளியான 'காந்தாரா 1' ஒரு வாரத்தை எட்டுவதற்கு முன்பாகவே, இதுவரை ரூ.335 கோடி வரை வசூல் செய்துள்ளது.
படத்தை பார்த்து ரசிகர்களும், "எந்தப்படமும் முன்மாதிரியாக இல்லாததுப்போல இந்த படத்தை உருவாக்கி, ரிஷிப் ஷெட்டி ரசிகர்களை இயக்குநரின் உலகத்திற்குள் இழுத்து சென்று விட்டார் என்றும்.. சில நம்ப முடியாத இயற்பியல் விதிகளுக்கு முரனாக 'காந்தாரா 1' இருந்தாலும் அதை நம்பும்விதமாக படத்தை மெருகேற்றிய விதத்தை பாராட்டியும் வருகிறார்கள். பாகுபலிக்கு நிகரான ஒரு மாஸ்டர் பீஸ்சாக 'காந்தாரா 1' உள்ளது என்பதே பல திரைபிரபலங்களின் கருத்தாகவும் உள்ளது.
45
ரிஷப் ஷெட்டி காந்தாரா
இயக்குனராகவும், நடிகராகவும் ரிஷப் ஷெட்டி தன்னுடைய 100 சதவீத உழைப்பை போட்டிருந்தாலும், அவருடைய உழைப்புக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் பணியாற்றி, இந்த படம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உறுதுணையாக இருந்தவர்கள் என்றால், அது டெக்னீசியன்கள் தான். குறிப்பாக ஆர்ட் டைரக்டரும் இசையமைப்பாளரும் கதைக்கு தேவையான காட்சிகளையும், இசையையும் திகட்டாமல் கொடுத்துள்ளனர்.
55
காந்தாரா ஓடிடி ரிலீஸ்
இப்படி தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வரும் இந்த படத்தை... திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் பார்த்து ரசித்து வந்தாலும், ஓடிடி-யில் இந்த படத்தை பார்ப்பதாகவும் லட்சக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாகவே இந்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது... 'காந்தாரா 1' திரைப்படம், இந்த மாதம் அக்டோபர் 30-ஆம் தேதி, அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.