Love Insurance Kompany Release Date Postponed : அக்டோபர் 17ம் தேதியில் வெளியாக இருந்த lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்படம் ரிலீஸிலிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏன், என்ன காரணம் என்பது பற்றி பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தை கொடுத்து தன்னை சிறந்த இயக்குநராக காட்டிய பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக லவ் டுடே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து தன்னையும் ஒரு நடிகராக ரசிகர்களுக்கு காட்டினார். அதன் பிறகு டிராகன் படத்தில் நடித்தார். இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இப்படி அடுத்தடுத்த படங்களில் நடித்து ஹிட் கொடுத்த நடிகர் என்ற சாதனையை பிரதீப் ரங்கநாதன் படைத்தார்.
தற்போது Dude மற்றும் lik ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் lik படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நயன் தாராவின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்க்ரீன் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு, கௌரி ஜி கிஷான், ஷா ரா, மிஷ்கின், ஆனந்தராஜ், சுனில் ரெட்டி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதே போன்று டியூட் படமும் தீபாவளிக்கு முன்பாக 17ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரே நேரத்தில் 2 படங்களும் வெளியானால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படக் கூடும் என்பதால், ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தள்ளி வைத்தனர்.
45
LIK படத்தின் தயாரிப்பாளர்
இது குறித்து LIK படத்தின் தயாரிப்பாளர் கூறியிருப்பதாவது: ஒரே பாதையில் செல்லும் இரண்டு ரயில்களைப் போல, நேருக்கு நேர் மோதுவது யாருக்கும் உதவாது. எங்கள் அன்புக்குரிய ஹீரோ பிரதீப் ரங்கநாதன் மீது உண்மையான அக்கறையுடனும், இரண்டு படங்களுக்கும் பின்னால் உள்ள முயற்சிகளுக்கு மரியாதையுடனும், LIK வெளியீட்டை டிசம்பர் 18, 2025 அன்று மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளனர்.
55
பிரதீப் ரங்கநாதன்
இது பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லீக் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் போதே, ரசிகர்கள் முன்னிலையில் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது. இத்திரரைப்படதின் கதையாக 2040 ல் இருவர் காதலித்தால் அந்த காதல் எவ்வாறு இருக்கும் என்றும், லீக் மூலம் இருவர் இடையே வரும் பிரச்சனைகளும், இந்த டெக்னாலஜி எல்லாம் தாண்டி தன் காதலை வெற்றியடைய செய்தாரா, என்றும் பல சுவாரசியமான சீன்கள் இருக்கும் என தெரிய வருகிறது. எது எப்படியோ படம் டிசம்பர் 18ஆம் தேதி திரைக்கு வருவது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.