சண்முகத்திற்கு காத்திருந்த அவமானம் - ஷாக் கொடுத்த தங்கைகள்! அண்ணா சீரியல் அப்டேட்!

Published : Oct 07, 2025, 03:18 PM IST

Anna Serial: அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகத்திற்கு தோண்டிய சதிவலையில் சௌந்தரபாண்டி சிக்கிய நிலையில், இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

PREV
14
அசிங்கப்படுத்தப்படும் சண்முகம்:

அதாவது, சண்முகம் குடும்பத்தினர் அனைவரும் சௌந்தரபாண்டி வீட்டிற்கு வருகின்றனர். அப்போது சௌந்தரபாண்டி சண்முகத்தை பார்த்து... கூட பொறந்த தங்கச்சிக்கு பிரசவம் பாக்க கூட வக்கு இல்ல.. பழைய புடவையை கட்டி அனுப்புறான்.. இவனுக்கெல்லாம் எதுக்கு வேட்டி சட்டை என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.

பிக்பாஸ் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸூக்கு கொடுக்கப்பட்ட பிரீடம்; இனிமே வேக்கப் சாங் கிடையாது!

24
மாறி மாறி ஷாக் கொடுக்கும் தங்கைகள்:

இதை கேட்டு சண்முகம் கோபமாகி என் தங்கச்சிக்கு சீமந்தத்தை நான் நடத்தி காட்டுறேன் என்று சவால் விடுகிறான். அடுத்த நாள் மீண்டும் இங்கு வந்து சீமந்தத்திற்காக இசக்கியை வீட்டிற்கு கூப்பிட வீரா இந்த வீட்டிற்கு வாழ வரமால் நான் அந்த வீட்டிற்க்கு வரமாட்டேன் என்று ஷாக் கொட்டுகிறாள்.

34
தாலியை கழட்டி கொடுக்க சொல்லும் சௌந்தரபாண்டி:

சண்முகம் வீராவை இந்த வீட்டிற்கு வாழ அனுப்ப மாட்டேன் என்று சொல்ல, இசக்கி அப்படினா நானும் அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று சொல்லி விடுகிறாள். சௌந்தரபாண்டி இந்த வீட்டிற்கு உன் தங்கச்சி வாழ வர மாட்டாள் என்றால் இந்த வீட்டு பையன் கட்டுன தாலி அவ கழுத்துல எதுக்கு இருக்கனும்? கழட்டி கொடுக்க சொல்லு என்று கேட்கிறார்.

ஷார்ட் பிரேக்குக்கு பின் மீண்டும் தமிழில் பிஸியான அழகு ராட்சசி ஆஷ்னா சவேரி!

44
அடுத்து நடக்க போவது என்ன?

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories