கார்த்திக்கை சிக்க வைக்க துடிக்கும் தீபாவதி.. நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Published : Oct 07, 2025, 02:55 PM IST

Karthigai Deepam 2: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் TRP-யில் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ள 'கார்த்திகை தீபம் 2' சீரியலில், இன்று நடக்க போவது என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

PREV
15
கார்த்தி பேச்சை நம்பும் மக்கள்:

கார்த்திகை தீபம் 2 சீரியலின் நேற்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி மருத்துவமனைக்காக எழுதி கொடுக்க உள்ள நிலத்தில்சாமி சிலை கிடைக்க அது நல்ல இடம் தான் என்று கார்த்தி அனைவரையும் நம்ப வைத்து விடுகிறார்.

மாமியார் வீடு தான் உலகம் என்று மாறிய செந்தில் – மாமனார் வீட்டில் ஐக்கியமான மீனா; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

25
தடுத்து நிறுத்தப்படும் சாமுண்டீஸ்வரி:

இதை தொடர்ந்து, ஊர் காரர்கள் சாமுண்டீஸ்வரியை கையெழுத்து போட சொல்லி கேட்க, அவளும் ராஜராஜனும் வேறு வழியின்றி கையெழுத்து போட்டு கொடுக்கிறார்கள். பின்னர் சாமுண்டீஸ்வரி அங்கிருந்து கிளம்ப தயாராக ஊர் பெரியவர்கள் தடுத்து நிறுத்துகின்றனர்.

பிக்பாஸ் சூப்பர் டீலக்ஸ் ஹவுஸ்மேட்ஸூக்கு கொடுக்கப்பட்ட பிரீடம்; இனிமே வேக்கப் சாங் கிடையாது!

35
கடுப்பில் வில்லன் டீம்:

பரமேஸ்வரி பாட்டியுடன் சேர்ந்து நீங்களும் உங்க கணவரும் இணைந்து டாகுமெண்ட்டை கொடுங்க, கோவில் திருவிழாவில் உங்களுக்கு முதல் மரியாதையும் கொடுக்கிறோம் என்று சொல்லி சாமுண்டீஸ்வரியை சம்மதிக்க வைக்க வில்லன்கள் டீம் போட்ட பிளான் எல்லாம் சொதப்பல் ஆகிவிட்டதே என நினைத்து கடுப்பில் உள்ளனர்.

45
இளையராஜாவுக்கு தெரிய வந்த உண்மை:

இதை தொடர்ந்து இளையராஜா வேலை செய்யும் ஹோட்டலுக்கு தீபாவதி வருகிறாள், இளையராஜா நீண்ட நாட்களாக இங்கு வேலை செய்பவன் என்பதை அறிந்து கொள்கிறாள். அவள் கொண்டு வந்த பைலை மறந்து விட்டு செல்ல அதில் கார்த்தியின் போட்டோ இருக்க அதனை பார்த்து இளையராஜா டென்ஷனும் குழப்பமும் அடைகிறான்.

55
சிக்குவானா கார்த்திக்:

தீபாவதியிடம் நீங்க நல்லா பேசுறீங்க என்று சொல்லி ஒரு செல்பியை எடுத்து அதை கார்த்திக்கு அனுப்பி வைக்கிறான், கார்த்திக் அருணுக்கு போன் செய்து ஒரு லேடி வந்து போன் சிசிடிவி ஆதாரங்களை கேட்டால். பிறகு இரண்டும் ஒரே லேடி தான் என அறிந்து ஷாக் ஆகிறான்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? தீபாவதியில் கார்த்தி என்ன பிரச்னையை எதிர்கொள்வான் என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories