காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் ரிலீஸ் ஆகி ஐந்து நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், அப்படம் ரஜினிகாந்தின் கூலி பட லைஃப் டைம் வசூல் சாதனையை முறியடித்து மாஸ் காட்டி உள்ளது.
தரமான படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் கேரளாவில், பிற மொழிப் படங்களுக்கும் நல்ல மார்க்கெட் இருக்கிறது. இதனால் தான் பாகுபலி, புஷ்பா, கே.ஜி.எஃப், லியோ என பல படங்கள் அங்கு வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில், 2022-ல் வெளியான கன்னடப் படமான 'காந்தாரா' கேரளாவில் நல்ல வசூலைப் பெற்றது. இப்போது அதன் தொடர்ச்சியாக வந்துள்ள 'காந்தாரா: சாப்டர் 1' மற்ற சந்தைகளுடன் கேரளாவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளிலேயே 'தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ்' எனப் பெயர் பெற்ற இந்தப் படம், முதல் வார இறுதியில் திரையரங்குகளை மக்கள் கடலாக மாற்றியது.
24
காந்தாரா சாப்டர் 1 வசூல்
இது பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்குப் பிரதிபலித்தது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் இப்போது வெளியாகியுள்ளன. வெளியான நாளான அக்டோபர் 2, வியாழக்கிழமை அன்று கேரளாவில் இருந்து இப்படம் ரூ.6.05 கோடி வசூலித்தது. வெள்ளிக்கிழமை ரூ.4.45 கோடியும், சனிக்கிழமை ரூ.5.69 கோடியும் வசூலித்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை, வெளியான நாளை விட அதிகமாக வசூலித்துள்ளது. டிராக்கர்களின் கணக்குப்படி, ஞாயிற்றுக்கிழமை வசூல் ரூ.6.66 கோடி. அதேபோல் திங்கட்கிழமையும் சக்கைப்போடு போட்ட இப்படம் 3 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது.
34
கூலி சாதனையை முறியடித்த காந்தாரா சாப்டர் 1
இதன் மூலம் முதல் ஐந்து நாட்களில் கேரளாவில் இருந்து மட்டும் ரூ.25.86 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் இரண்டு சாதனைகளை இப்படம் படைத்துள்ளது. ஒன்று, 2022-ல் வெளியான 'காந்தாரா' படத்தின் கேரள லைஃப்டைம் வசூலை இந்தப் படம் ஏற்கனவே முறியடித்துவிட்டது. மற்றொன்று, இந்த ஆண்டு கேரளாவில் அதிக வசூல் செய்த பிற மொழிப் படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்துள்ளது. ரஜினிகாந்தின் தமிழ்ப் படமான 'கூலி' தான் இந்த ஆண்டு கேரளாவில் அதிக வசூல் செய்த பிறமொழி படமாக இருந்து வந்த நிலையில், அதை காந்தாரா சாப்டர் 1 முறியடித்துள்ளது.
டிராக்கர்களின் புள்ளி விவரங்களின்படி, 'கூலி'யின் கேரள வாழ்நாள் வசூல் ரூ.24.80 கோடியாக இருந்தது. இதை, 'காந்தாரா சாப்டர் 1' ஐந்து நாட்களில் முறியடித்து இந்த ஆண்டு கேரளாவில் அதிக வசூல் செய்த பிற மொழிப் படமாக மாறி உள்ளது. பிருத்விராஜ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை கேரளாவில் விநியோகம் செய்துள்ளது. இப்படத்தின் கேரள வாழ்நாள் வசூலை இப்போது கணிக்க முடியாத சூழல் உள்ளது. 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு கேரளாவில் இருந்து 50 கோடி வசூலிக்கும் முதல் கன்னடப் படமாக 'காந்தாரா சாப்டர் 1' இருக்கும் என டிராக்கர்கள் கணித்துள்ளனர். இதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது.