நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், அவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் பற்றி பார்க்கலாம்.
விஜய் தேவரகொண்டா பெயரைக் கேட்டாலே நடிகை ராஷ்மிகா மந்தனா முகம் வெட்கத்தில் சிவந்துவிடும், கடந்த சில ஆண்டுகளாக சீக்ரெட்டாக காதலித்து வந்த இந்த ஜோடி விரைவில் திருமண பந்தத்தில் இணைய உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அண்மையில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். கல்யாணத்தை பிரம்மாண்டமாக நடத்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இருவரும் திட்டமிட்டு உள்ளனர்.
24
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம்
கீதா கோவிந்தம் படத்தில் இவர்களது ஜோடி திரையில் பெரும் வரவேற்பை பெற்றது. சூப்பர் ஜோடி என அழைக்கப்பட்டனர். படத்திற்குப் பிறகும் ஆஃப் ஸ்கிரீனில் ஒன்றாக காணப்பட்டனர். ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா திருமணம் 2026 பிப்ரவரியில் நடைபெறும் என கூறப்படுகிறது. திருமணம் மற்றும் வரவேற்பு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விஜய் தேவரகொண்டாவுக்கு ராஷ்மிகா சரியான ஜோடி என ரசிகர்கள் முன்பே கணித்திருந்தனர். இதனால் விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரம்மாண்ட திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.
34
வயது வித்தியாசம்
இந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ராஷ்மிகா மந்தனாவின் வயது 29. விஜய் தேவரகொண்டாவின் வயது 36. இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் 7 ஆண்டுகள். இருவரும் டேட்டிங் செய்வதாக வதந்திகள் வந்த நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். படத்தில் இணைந்த பிறகு ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா இடையே நெருக்கம் அதிகரித்து நாளடைவில் அது காதலாக மாறியது.
விஜய் தேவரகொண்டாவை காதலிக்கும் முன்னர் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடன் கடந்த 2017-ம் ஆண்டு ராஷ்மிகாவுக்கு நிச்சயதார்த்தம் ஆனது. இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் 11 ஆண்டுகள். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்களது திருமணம் நிச்சயதார்த்தத்தோடு நின்று போனது. ரிஷப் ஷெட்டி உடனான காதல் முறிவுக்கு பின்னர் தான் ராஷ்மிகா பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.