Blue sattai-க்கு பின்னால் இப்படி ஒரு ஸ்டோரி இருக்கா! மாறன் எப்படி ப்ளூசட்டை மாறன் ஆனார்?- அவரே சொன்ன நச் பதில்

Published : Oct 09, 2022, 12:00 PM IST

Blue Sattai Maaran : சர்ச்சைகளுக்கு பெயர்போன விமர்சகரான மாறன், தனக்கு எப்படி ப்ளூ சட்டை மாறன் என பெயர் வந்தது என்பது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளர். 

PREV
14
Blue sattai-க்கு பின்னால் இப்படி ஒரு ஸ்டோரி இருக்கா! மாறன் எப்படி ப்ளூசட்டை மாறன் ஆனார்?- அவரே சொன்ன நச் பதில்

தமிழ் சினிமா படங்களை யூடியூப்பில் விமர்சனம் செய்து அதன் மூலம் பேமஸ் ஆனவர் ப்ளூ சட்டை மாறன். பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களையே கூறி அடிக்கடி சர்ச்சையிலும் இவர் சிக்குவதுண்டு. இவர் ஆண்ட்டி இண்டியன் என்கிற படத்தையும் கடந்தாண்டு இயக்கி வெளியிட்டார். இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை.

24

சமீப காலமாக இவரது விமர்சனங்களை பார்த்து இயக்குனர்கள் சிலரும் நேரடி மோதல்களில் களமிறங்கி வருகின்றனர். அந்தவகையில் இரவின் நிழல் படம் ரிலீசான போது பார்த்திபனும், வெந்து தணிந்தது காடு படம் ரிலீசானபோது இயக்குனர் கவுதம் மேனனும் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக சாடினர். அதிலும் குறிப்பாக கவுதம் மேனன் ஒரு பேட்டியில், ப்ளூ சட்டை மாறனை இறங்கி செய்யணும்னு தோணுது என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... காதலிக்க நேரமில்லை... விஜய் தேவரகொண்டா உடனான காதல் சர்ச்சை குறித்து மனம்திறந்த ராஷ்மிகா

34

இவ்வாறு சர்ச்சைகளுக்கு பெயர்போன விமர்சகரான மாறன், தனக்கு எப்படி ப்ளூ சட்டை மாறன் என பெயர் வந்தது என்பது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளர். அதில் அவர் கூறியதாவது : “வார வாரம் வெள்ளிக்கிழமை வந்தால் ரிவ்யூ பண்ணனும். அதற்காக அணியும் சட்டை ரிப்பீட் ஆக கூடாதுன்னு நினைச்சோம். அப்படினா வார வாரம் ஒரு சட்டை வாங்கி போட்டால் தான் ரிப்பீட் ஆகாது. வாரத்துக்கு ஆயிரம் ரூபாய் செலவு பண்ணா தான் அப்படி சட்டை அணிய முடியும். ஆனால் அப்போது அந்த அளவுக்கு என்னிடம் வசதி இல்லை.

44

அப்படி வாரம் ஒரு சட்டை வாங்கினால் வருடத்திற்கு 52 சட்டை வந்துவிடும். ஆனால் 52 சட்டை போடுவதற்கு நமக்கு தகுதியில்லை. அதன்பிறகு தான் ஒரு சீருடை மாதிரி ஆக்கிவிடுவோம் என யோசித்தோம். அப்போ இந்த ப்ளூ சட்டையை போட்டு பார்த்தோம். அது செட் ஆச்சு. சரி இதையே வச்சிடுவோம்னு முடிவு பண்ணோம்.

ஆரம்பத்தில் என் பெயர் யாருக்குமே தெரியாது. அப்போது எனது விமர்சனத்தை பார்ப்பவர்கள், கருப்பா... ப்ளூ சட்டைக்காரன் ஒருத்தன் இருக்கான் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அதுவே நாளடைவில் எனது அடையாளமாக மாறிவிட்டது என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ‘பிக்பாஸ் 6’ இன்னும் தொடங்கவே இல்ல... அதற்குள் Army-யா! நெட்டிசன்களால் கொண்டாடப்படும் இலங்கை பெண் போட்டியாளர்

click me!

Recommended Stories