Nayanthara : செல்போனுக்கு அனுமதி இல்லை... நயன் - விக்கி திருமணத்தில் பங்கேற்பவர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா?

Published : Jun 08, 2022, 09:55 AM IST

Nayanthara Marriage restrictions : திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன்களை கொண்டுவரக்கூடாது, போட்டோ எடுக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாம்.

PREV
14
Nayanthara : செல்போனுக்கு அனுமதி இல்லை... நயன் - விக்கி திருமணத்தில் பங்கேற்பவர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா?

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் நாளை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அவர்களது திருமணத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்காக கடற்கரையோரம் பிரம்மாண்ட செட்டும் அமைக்கப்பட்டு உள்ளதாம்.

24

விக்கி - நயனின் திருமணத்தை படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இதனை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனம் இதனை இயக்கும் பொறுப்பை இயக்குனர் கவுதம் மேனனிடம் வழங்கி உள்ளது. 

34

இவர்களது திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளதாம். குறிப்பாக திருமணத்திற்கு வருபவர்கள் செல்போன்களை கொண்டுவரக்கூடாது, போட்டோ எடுக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அதில் அடங்குமாம். படமாக்கும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி உள்ளதால் திருமணம் குறித்த வீடியோ எதுவும் லீக் ஆகிவிடக் கூடாது என்பதன் காரணமாக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

44

இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், இவர்களது திருமணத்திற்கு வர சில பிரபலங்கள் தயக்கம் காட்டி வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் நடிகை கத்ரீனா கைஃப் - நடிகர் விக்கி கவுஷல் திருமணத்திலும் இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நயன்தாரா திருமணத்துக்காக கடற்கரையில் இப்படி ஒரு பிரம்மாண்ட செட்டா.. ஷங்கர் படத்தையே மிஞ்சிடுவாங்க போல

Read more Photos on
click me!

Recommended Stories