Pooja Hegde : சம்பள விஷயத்தில் நயன்தாராவை பீட் பண்ணிய பூஜா ஹெக்டே... பீஸ்ட் நாயகிக்கு இவ்வளவு மவுசா?

Published : Jun 08, 2022, 08:32 AM IST

Pooja Hegde : பூஜா ஹெக்டே நடிப்பில் அண்மையில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா என அனைத்து படங்களும் ஃபிளாப் ஆன போதும் அவருக்கான மவுசு இன்னும் குறையாமல் இருப்பது முன்னணி நடிகைகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. 

PREV
14
Pooja Hegde : சம்பள விஷயத்தில் நயன்தாராவை பீட் பண்ணிய பூஜா ஹெக்டே... பீஸ்ட் நாயகிக்கு இவ்வளவு மவுசா?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா, பல வருடங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வரும் நயன், அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமானார். அங்கு இவர் ஹீரோயினாக நடிக்கும் முதல் படத்தை அட்லீ இயக்குகிறார்.

24

ஜவான் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு ஜூன் மாதம் 2-ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. பான் இந்தியா நடிகையாக நயன்தாரா, உயர்ந்துள்ள போதும், அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதலிடத்தை அவர் இழந்துள்ளார்.

34

தற்போது அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகையாக நடிகை பூஜா ஹெக்டே முதலிடத்தை பிடித்துள்ளார். நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளமாக வாங்கி வரும் நிலையில், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஜன கன மன படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டேவுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாம்.

44

நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் அண்மையில் வெளியான ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா என அனைத்து படங்களும் ஃபிளாப் ஆன போதும் அவருக்கான மவுசு இன்னும் குறையாமல் இருப்பது முன்னணி நடிகைகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. நடிகை பூஜா ஹெக்டே கைவசம் இந்தியில் சர்க்கஸ், கபி ஈத் கபி தீபாவளி போன்ற படங்களும், தெலுங்கில் ஜன கன மன படமும் உள்ளது. இதில் அவர் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கும் கபி ஈத் கபி தீபாவளி படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் ரீமேக் ஆகும்.

இதையும் படியுங்கள்... Indian 2 : ரெட் ஜெயண்ட் வசம் செல்கிறதா இந்தியன் 2?... உதயநிதியின் திடீர் அப்டேட்டால் ரசிகர்கள் குழப்பம்

Read more Photos on
click me!

Recommended Stories