போன வய்-டா மயி*ன்னு சொன்னது ஏன்? அனுகிரஹாவிற்கு நக்‌ஷத்ரா கொடுத்த பதிலடி

Published : Apr 27, 2026, 11:45 AM IST

நடிகை அனுகிரஹா எஸ். நம்பியார், 'ரிசார்ட்' என்ற தமிழ் வெப் சீரிஸ் குழுவினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில், அதற்கு நக்‌ஷத்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
14
Nakshatra befitting reply to Actress Anugraha

'ரிசார்ட்' என்ற தமிழ் வெப் சீரிஸின் ஹீரோவும், எழுத்தாளருமான விஜய் குமார், அவரது மனைவி நக்ஷத்ரா மூர்த்தி மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது மலையாள நடிகை அனுகிரஹா எஸ். நம்பியார் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த வெப் சீரிஸுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, படப்பிடிப்பை நடத்தாமல் தன்னை இழுத்தடித்ததாகவும், இதனால் தனது மற்ற பட வாய்ப்புகளையும் இழந்து பொருளாதார ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும் அனுகிரஹா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

24
அனுகிரஹா வெளியிட்ட வீடியோ

"நான் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையான நெருக்கடிகளை சந்திச்சேன். விஜய் குமாரும், அவரோட மனைவியும் என்னை ரொம்ப அவமானப்படுத்துற மாதிரி பேசினாங்க. ஒரு வருஷத்துக்கு நடிக்க ஒப்பந்தம் போட்டாங்க. ஆனா, கடந்த நாலு மாசமா என்னை ஷூட்டிங்குக்கே கூப்பிடல. இந்த பிரச்சனை ஏழு மாசமா தொடர்ந்துட்டு இருக்கு, கடைசி ரெண்டு மாசத்துல நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சு. வேற படங்கள்ல நடிக்க அனுமதி கேட்டா, ஒப்பந்தத்தை காட்டி தடுக்கிறாங்க. ஆனா, இந்த சீரிஸ் ஷூட்டிங்கும் நடக்காது. இதனால, 'ஜியோஹாட்ஸ்டார்' ஓட இன்னொரு ப்ராஜெக்ட் வாய்ப்பு எனக்கு கைவிட்டுப் போச்சு. எனக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ, அதைச் சொல்றதுக்காக போன் பண்ண என் நண்பர்கிட்ட, 'அவளைக் கல்யாணம் பண்ணி கூடவே வச்சுக்கோ, இல்லன்னா வந்து நடிக்கச் சொல்லு'னு விஜய் குமாரோட மனைவி நக்ஷத்ரா சொல்லியிருக்காங்க."

34
அனுகிரஹா குற்றச்சாட்டு

"இந்த மன உளைச்சலால எனக்கு வலிப்பு நோய் வந்து, மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இது எல்லாமே என்னை உடல், மனசு, பொருளாதாரம்னு எல்லா விதத்திலயும் முடக்கிப் போட்டுடுச்சு. என் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கு. இனிமேலும் என்னால அமைதியா இருக்க முடியாது. அவங்களோட செயல்களுக்கும் வார்த்தைகளுக்கும் அவங்கதான் பொறுப்பு. இதோட விளைவுகளைப் பத்தி நான் கவலைப்படல. இவங்களைப் போன்ற சிலரால சினிமா துறையே கெட்டுப் போகுதுன்னு மக்கள் தெரிஞ்சுக்கணும்," என்று அனுகிரஹா தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் கூறியுள்ளார். இவருக்கு நடிகை கௌரி கிஷன் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

44
நக்‌ஷத்ரா விளக்கம்

அனுகிரஹாவின் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ள நக்‌ஷத்ரா, தன் தரப்பு நியாயத்தை கூறி வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் ரிசார்ட் வெப் தொடரில் நடித்த அனுகிரஹா ஒரு நாள் என்னுடைய கணவர் விஜய்க்கு போன் போட்டு தனக்கு காசு தருமாறு பேசினார். பின்னர் அவளுடைய பாய் பிரெண்ட் போனை வாங்கி மலையாளத்தில் கச்சாமுச்சானு பேசினார். என் கணவருக்கு மலையாளம் தெரியாது என்பதால் அவர் என்னிடம் போனை கொடுத்து பேச சொன்னார். அப்போது அந்த நபர் கத்தி பேசியதால் நான் கடுப்பாகி போனை வையுடா மயி* என சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டேன். இரவு 11 மணிக்கு போன் பண்ணி இப்படி பேசினால் யாருக்கு தான் கோபம் வராது. அவளுக்கு சம்பளம் வரலேன்னு எங்ககிட்ட கேக்குறா, அதை அவள் தயாரிப்பு நிறுவனத்திடம் தானே கேட்க வேண்டும். அதனால் தான் அப்படி பேசினேன் என விளக்கம் அளித்துள்ளார் நக்‌ஷத்ரா.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories