Another Simple Favor
இத்தாலியில் நடக்கும் ஒரு பிரம்மாண்ட திருமண விழாவின் நடுவே ஒரு கொலை நடக்கிறது. சஸ்பென்ஸ் மற்றும் மர்மம் நிறைந்த இந்த கதை பல திருப்பங்களுடன் பயணிக்கிறது. மே 1 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
Asterix & Obelix: The Big Fight
கால் கிராமத்தை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்றும் முயற்சியில், ஒரு மேஜிக் பானத்தின் ரகசியம் ஆபத்தில் சிக்குகிறது. ஆஸ்டெரிக்ஸ் மற்றும் ஒபெலிக்ஸ் இருவரும் காமெடியும் ஆக்ஷனும் நிறைந்த ஒரு சாகசப் பயணத்தில் இறங்குகிறார்கள். இது ஏப்ரல் 28-ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.
Chef’s Table: Legends
இந்த சீரிஸின் 10வது ஆண்டுவிழா ஸ்பெஷல் இது. உலகப் புகழ்பெற்ற செஃப்களான ஜேமி ஆலிவர், ஜோஸ் ஆண்ட்ரெஸ், ஆலிஸ் வாட்டர்ஸ், தாமஸ் கெல்லர் ஆகியோரின் வாழ்க்கை மற்றும் சமையல் கலையை இதில் காட்டுகிறார்கள். ஏப்ரல் 28ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.
Exterritorial
தன் மகன் காணாமல் போனதால், முன்னாள் சிறப்புப் படை அதிகாரி ஒருவர் அமெரிக்கத் தூதரகத்திற்குள் ஊடுருவி, ஒரு பெரிய சதித்திட்டத்தை வெளிக்கொண்டு வர முயற்சிக்கிறார். ஏப்ரல் 30ந் தேதி முதல் நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்.