Ethirneechal Today Episode : ஆதி குணசேகரனுக்கு என்னாச்சு? கதறி அழுத கதிர்; கல்லுமாதிரி நின்ற ஜனனி

Published : Apr 27, 2026, 10:02 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை பற்றிய அப்டேட் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி வீட்டைவிட்டு வெளியேறி சக்தி உடன் தனியாக வசித்து வந்த நிலையில், ஆதி குணசேகரன் வீட்டிற்கு வக்கீலை வர வைத்து தன் மேல் கொடுத்த வழக்குகளை எல்லாம் வாபஸ் வாங்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருந்தார். அப்போது ஜனனியும் இருந்தால் சுமூகமாக பேசி முடித்துவிடலாம் என வக்கீல் சொல்ல, ஈஸ்வரி, தர்ஷினியை அனுப்பி ஜனனியை அழைத்து வர சொல்கிறார். ஈஸ்வரி போன் போட்டபோதெல்லாம் எடுக்காத ஜனனி, தர்ஷினி அடித்ததும் உடனே எடுத்து பேசுகிறார். பின்னர் தர்ஷினி விஷயத்தை கூறி ஜனனியை வீட்டுக்கு அழைத்து வருகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ஜனனியை வறுத்தெடுக்கும் ஈஸ்வரி

ஜனனி வீட்டுக்கு வந்ததும் அவர் ஆதி குணசேகரன் மீது போடப்பட்ட வழக்குகளை எல்லாம் படித்துக் காட்டுமாறு வக்கீலிடம் கூறுகிறார், அதனால் அரண்டு போன ஆதி குணசேகரனுக்கு திடீரென தலைசுற்றுகிறது. இதனால் கிரங்கி கீழே விழுகிறார். அதைப்பார்த்து பதறிப்போன கதிர், காரில் அழைத்து அவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டி செல்கிறார். அவர் காரில் ஏறும் வரை அனைவரும் வாசலில் காத்திருக்கிறார்கள். ஆனால் ஜனனி மட்டும் குத்துக்கல் போல வீட்டின் ஹாலிலேயே நிற்கிறார். இதைப்பார்த்து கோபமடைந்த ஈஸ்வரி, இது தான் உன்னோட மனிதாபிமானமா என கேட்டு ஜனனியை வறுத்தெடுக்கிறார். அவர் நடிக்கிறார் என்று சொல்கிறார் ஜனனி.

35
ஈஸ்வரி போட்ட கண்டிஷன்

அதன்பின்னர் நான் போன் போட்டபோது ஏன் எடுக்கல என ஈஸ்வரி கேட்க, அதற்கு வேண்டுமென்றே தான் எடுக்கவில்லை என கூறுகிறார் ஜனனி. இதைக்கேட்டு அதிர்ந்து போன ஈஸ்வரி, கிச்சனுக்குள் சென்று அழுகிறார். அப்போது ஜனனியும் எமோஷனலாகி அழுதுகொண்டே, ஈஸ்வரி தனக்கு அம்மா மாதிரி என கூறுகிறார். உடனே கிச்சனில் இருந்து விறுவிறுவென வந்த ஈஸ்வர், உனக்கு நான் அம்மாவா இருக்க விரும்பல என சொல்லிவிடுகிறார். இதைக்கேட்டதும் இடிந்து போகிறார் ஜனனி. பின்னர் ஆதி குணசேகரனை பார்க்க அனைவரும் ஆஸ்பத்திரிக்கு கிளம்ப முடிவெடுத்த நிலையில், ஜனனி மட்டும் தான் அவரைப் பார்க்க வரவில்லை என கூறிவிடுகிறார்.

45
சண்டைபோடும் கதிர்

நம்ம கண்முன்னாடி தான் அவர் மயங்கி விழுந்தாரு, நம்ம இப்போ போய் அவரை பார்க்கக் கூடாதா என ஈஸ்வரி கேட்க, அதற்கு ஜனனி, இங்க இறக்கம் இருக்குறவங்க எல்லாரும் போங்க. அதேமாதிரி, யாரும் போ போனு என்னை வற்புறுத்தாதீங்க என கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிடுகிறார். அந்த நேரம் பார்த்து கதிர் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வருகிறார். அவர் ஜனனியை பார்த்து, உன்னால தான் அவருக்கு இந்த நிலைமை என சொல்கிறார். அதற்கு ஜனனி, நான் தப்பு பண்ணிருந்தா என்னவேண்டுமானால் புடிச்சு ஜெயில்ல போடுங்க. ஆனால் முதலில் அவருக்கு என்ன ஆச்சுங்குறத சொல்லுங்க என கேட்க, கதிரும் டாக்டர் சொன்னவற்றை அனைவர் முன்னிலையிலும் சொல்கிறார்.

55
குணசேகரனுக்கு என்ன ஆச்சு?

அந்த நேரத்தில் விசாலாட்சி அழுதுகொண்டே, என் மகனை பார்க்க என்னை கூட்டிட்டு போடா என கதிரிடம் கேட்கிறார். அதற்கு அவர், இதுங்களோடு கூட்டு சேர்ந்துகிட்டு ஆடுனேல்ல, இப்போ மட்டும் வர்றேன்னு குதிக்குற, இன்னும் அண்ணன் எத்தனை நாள் உயிரோடு இருப்பார்னு தெரியாது என டாக்டர் சொல்லிவிட்டதாக கூறி அழுகிறார் கதிர். அதைக்கேட்டும் ஜனனி குத்துக்கல் போல் நிற்கிறார். ஈஸ்வரி கண்ணீர் சிந்துகிறார். அப்படி ஆதி குணசேகரனுக்கு என்ன தான் ஆச்சு? அவர் உடலில் என்ன பிரச்சனை? எதனால் டாக்டர் அப்படி சொன்னார்? இல்லையெனில் இதுவும் அவர் போடும் டிராமாவா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories