2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா. இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். தமிழில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த, 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
Sundeep Kishan
இதற்க்கு காரணம், நடிகர் சந்தீப் கிஷன் இவரை வாழ்த்தி போட்டிருந்த பிறந்தநாள் வாழ்த்து தான். இது தான் இவர்கள் டேட்டிங் செய்து கொண்டிருக்கிறார்களா? என்கிற சந்தேகத்தை எழ வைத்துள்ளது. சந்தீப் கிஷன் தன்னுடைய வாழ்த்தில் "ஹாப்பி பர்த்டே பாப்பா... லவ் யூ நீ எப்போதும் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்க விரும்புகிறேன். மகிழ்ச்சியாக இரு கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என கூறி இருந்தார்.
தெலுங்கு திரைப்பட நடிகரான சந்தீப், தமிழில் சில படங்களில் நடித்துள்ளதால்... தமிழ் திரையுலகிலும் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் உள்ளார். அந்த வகையில் தற்போது தனுஷ் நடிக்கும் 'மைக்கேல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.