தயாரிப்பாளருடன் மோதல்... எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெட் கார்டு கொடுத்து சினிமாவை விட்டே ஓரங்கட்ட திட்டம்..?

First Published | Mar 9, 2023, 3:00 PM IST

எஸ்.ஜே.சூர்யாவின் செயலால் அதிருப்தி அடைந்த பிரபல தயாரிப்பாளர் அவர் மீது புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளதால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் அஜித்தை வைத்து வாலி, விஜய்யுடன் குஷி போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆவார். இப்படி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். இவர் ஹீரோவாக நடித்த படங்களைவிட வில்லனாக நடிக்கும் படங்கள் சக்கைப்போடு போடுவதால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு தொடர்ந்து வில்லன் வேடங்கள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் இவர் வில்லனாக நடித்த மெர்சல், ஸ்பைடர், மாநாடு போன்ற படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால், தற்போது மார்க் ஆண்டனி, ஆர்.சி.15 போன்ற படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இதில் மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாகவும், ஷங்கர் இயக்கும் ஆர்.சி.15 படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு வில்லனாகவும் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.

Tap to resize

இப்படி பிசியான வில்லனாக வலம் வந்துகொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, இனி படங்களில் நடிக்கவே முடியாத வகையில் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க பிரபல தயாரிப்பாளர் முயன்று வருகிறாராம். ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்காக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் நடிக்க எஸ்.ஜே.சூர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்...  புது கெட்-அப் தீயா இருக்கே..! ஏகே 62 படத்திற்காக புதிய தோற்றத்திற்கு மாறிய அஜித் - வைரலாகும் நியூலுக் போட்டோஸ்

சில காரணங்களால் அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவால் நடிக்க முடியாமல் போனதாம். இதனால் அந்த அட்வான்ஸ் தொகையை ஞானவேல் ராஜாவிடமே திருப்பி கொடுத்திருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் இதை வாங்க மறுத்த ஞானவேல் ராஜா, பின்னர் பார்த்துக்கலாம் என சொல்லிவிட்டாராம். தற்போது எஸ்.ஜே.சூர்யா பிசியாகிவிட்டதால் தான் கொடுத்த அட்வான்ஸை மீண்டும் திருப்பி கேட்டிருக்கிறார் ஞானவேல் ராஜா.

ஞானவேல் ராஜா

ஆனால் எஸ்.ஜே சூர்யாவோ தான் படத்தில் நடித்துக் கொடுப்பதாகவும், ஆனால் தனக்கு தற்போதுள்ள மார்க்கெட்டிற்கு ஏற்றவாரு சம்பளம் தரவேண்டும் என ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார். இதனால் அப்செட் ஆன ஞானவேல் ராஜா, எஸ்.ஜே.சூர்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன் வடிவேலு இப்படி தயாரிப்பாளருடன் பிரச்சனையில் சிக்கி ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் படங்களில் நடிக்க முடியாமல் சில ஆண்டுகள் சினிமாவை விட்டே ஒதுக்கிவைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்! பிரபல நடிகர் கோரிக்கை!

Latest Videos

click me!