புது கெட்-அப் தீயா இருக்கே..! ஏகே 62 படத்திற்காக புதிய தோற்றத்திற்கு மாறிய அஜித் - வைரலாகும் நியூலுக் போட்டோஸ்

First Published | Mar 9, 2023, 2:14 PM IST

துணிவு படத்தில் அதிகளவில் தாடி வைத்திருந்த அஜித், தற்போது லைட்டான தாடியுடன் செம்ம கிளாஸ் லுக்கில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.

நடிகர் அஜித், துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர், ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால் அவரை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு, மகிழ் திருமேனியை இப்படத்திற்கு கொண்டு வந்தனர். அவரும் விஜய்க்காக தயார் செய்து வைத்திருந்த கதை ஒன்றையும், ஆர்யாவுக்காக ரெடி பண்ணி வைத்திருந்த கதையையும் அஜித்து சொல்லி இருக்கிறார்.

இந்த இரண்டு கதையும் அஜித்துக்கு மிகவும் பிடித்துப் போனாலும், அதில் ஆர்யாவுக்கு சொல்லப்பட்ட கதையை தேர்ந்தெடுத்துள்ளாராம் அஜித். ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணிகள்தான் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பையும் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளனர். இதற்கான அறிவிப்பும் இன்னும் சில தினங்களில் வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கவலைப்படாதீங்க நான் பாத்துக்கிறேன்.. சிகிச்சைக்கு பணமின்றி தவித்த தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு உதவமுன்வந்த ரஜினி


மறுபுறம் இப்படத்தில் பணியாற்ற உள்ள நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் குறித்த தகவலும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளார். இதுதவிர நீரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதேபோல் நடிகர் ஆர்யாவை இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்கவும், காஜல் அகர்வாலை ஹீரோயினாக நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இப்படி ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் படு ஜோராக நடந்து வரும் நிலையில், தற்போது நடிகர் அஜித் ஏகே 62 படத்திற்காக வித்தியாசமான தோற்றத்திற்கு மாறி உள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. துணிவு படத்தில் அதிகளவில் தாடி வைத்திருந்த அவர், தற்போது லைட்டான தாடியுடன் செம்ம கிளாஸ் லுக்கில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் அஜித்திற்கு இந்த கெட்-அப் தீயாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர்! பிரபல நடிகர் கோரிக்கை!

Latest Videos

click me!