அஜித் கழட்டிவிட்டா என்ன.. நான் இருக்கேன்னு சொன்ன கமல் - ஆண்டவருடன் கூட்டணி அமைத்து அதிரடிகாட்ட ரெடியான விக்கி?

அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்ட விக்னேஷ் சிவனுக்கு, நடிகர் கமல்ஹாசன் வாய்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக ரிலீஸ் ஆன திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விக்னேஷ் சிவன், நயன்தாரா, சமந்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்தாண்டு ரிலீசாகி வசூலையும் வாரிக் குவித்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அஜித்தின் ஏகே 62 திரைப்படத்தை இயக்க கமிட் ஆனார் விக்னேஷ் சிவன். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில், விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை கமிட் செய்து அதிரடி காட்டினார் அஜித். விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. அஜித் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், விக்னேஷ் சிவன் அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதையும் படியுங்கள்... கத்தாத... மைக்-அ கொடுத்துட்டு போயிட்டே இருப்பேன் பாத்துக்கோ - ரசிகர்கள் செயலால் டென்ஷன் ஆன இளையராஜா


அந்த வகையில் சமீபத்திய தகவல் படி விக்னேஷ் சிவன் இயக்க உள்ள புதிய படத்தில் லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து கைவிடப்பட்ட எல்.ஐ.சி என்கிற திரைப்படத்தை தான் தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்கி எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படம் எடுக்க அதிக பட்ஜெட் செலவாகும் என்பதால் அந்த சமயத்தில் இப்படத்தை லைகா நிறுவனம் கைவிட்டது. இந்நிலையில், தற்போது அதே பட்ஜெட்டில் அப்படத்தை தயாரிக்க நடிகர் கமல்ஹாசன் முன்வந்துள்ளதாக கோலிவுட்டில் ஒரு தகவல் பரவி வருகிறது. பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாக உள்ள இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.45 பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... வெற்றிமாறன் என்னை ஏமாத்திட்டாரு... விடுதலை இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பரபரப்பு பேச்சு

Latest Videos

click me!