
படத்தொகுப்பாளர் மோகனின் இளைய மகன் தான் ஜெயம் ரவி. இவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் தன் கல்லூரி படிப்பை முடித்ததும் சினிமாவில் பணியாற்ற விரும்பியுள்ளார். அவர் விருப்பத்திற்கேற்ப அவரை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக சேர்த்துவிட்டுள்ளார் அவரது தந்தை மோகன். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார் ஜெயம் ரவி.
பின்னர் இயக்குனராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஹீரோவாக அறிமுகமாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ரவி. இவர் முதன்முதலில் ஹீரோவாக நடித்த படம் ஜெயம். இப்படத்தை அவரது அண்ணன் ராஜா தான் இயக்கினார். மேலும் இப்படத்தை ரவியின் தந்தை மோகன் தான் தயாரித்து இருந்தார். இது தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ஜெயம் படத்தின் ரீமேக் ஆகும். இப்படம் கடந்த 2003-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதனால் அப்படத்தின் பெயர் அவருக்கு அடையாளமாக மாறியது.
ரீமேக் படங்கள் ஒர்க் அவுட் ஆனதால் ஜெயம் ரவி தன்னுடைய அண்ணன் ராஜா உடன் சேர்ந்து தொடர்ந்து பிறமொழியில் ஹிட்டான படங்களை எடுத்து ரீமேக் செய்து நடித்து வந்தார். அந்த வகையில் இவர்கள் கூட்டணியில் இரண்டாவதாக ரீமேக் செய்யப்பட்ட படம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. தெலுங்கில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் ரவிதேஜா நடித்த படத்தை தான் ரீமேக் செய்திருந்தார் ராஜா. இப்படமும் வேறலெவல் ஹிட் ஆனது.
பின்னர் அண்ணனுடனான கூட்டணியை நிறுத்திவிட்டு வேறு இயக்குனர்களுடன் பணியாற்ற தொடங்கினார் ஜெயம் ரவி. அந்த வகையில் அவர் பிற இயக்குனர்கள் இயக்கத்தில் நடித்த தாஸ், மழை ஆகிய படங்கள் பெரியளவில் ஒர்க் அவுட் ஆகவில்லை. அதனால் மீண்டும் ராஜாவுடன் கூட்டணி அமைத்த ஜெயம் ரவி, அடுத்தடுத்து உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார். இதுவும் தெலுங்கு படங்களின் ரீமேக் தான்.
இதையடுத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய பேராண்மை, அமீரின் ஆதிபகவன், கல்யாண கிருஷ்ணா இயக்கிய பூலோகம், லட்சுமணன் இயக்கிய ரோமியோ ஜூலியட் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஜெயம் ரவிக்கு, தனி ஒருவன் என்கிற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார் அவரது அண்ணன் மோகன் ராஜா. விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது.
இப்படி சினிமாவில் சக்சஸ்புல் நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் தன்னுடைய தந்தையுடன் டிக் டிக் டிக் என்கிற படத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் ஜெயம் ரவியின் மகனாகவே நடித்திருந்தார் ஆரவ்.
மறுபுறம் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி சினிமாவில் நடிக்காவிட்டாலும், சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் விதவிதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அவர் போட்டோவை பார்த்த பலரும் கேட்கும் ஒரே கேள்வி எப்போ சினிமாவில் நடிக்க போகிறீர்கள் என்பது தான். அந்த அளவுக்கு அழக்காக இருப்பார் ஆர்த்தி.
இதையும் படியுங்கள்.. இசைஞானியின் ஹிட் பாடலை அட்ட காப்பியடிச்சு.. மோகன் லால் படத்திற்காக விருதை தட்டி தூக்கிய இசையமைப்பாளர்!
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக செய்திகள் வெளியாகி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இருந்தாலும் அதுகுறித்து இருவருமே எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்ததால் அந்த விவகாரம் கப்சிப் என ஆனது. இந்த நிலையில், தற்போது ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக நடிகர் ஜெயம் ரவியே அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இருப்பினும் அவர்களின் விவாகரத்துக்கான காரணத்தை ஜெயம் ரவி வெளியிடவில்லை. ஆனால் இதற்கு முன்னர் இவர்களது விவாகரத்து செய்தி வெளியானபோது பத்திரிகையாளர்கள் சிலர் யூடியூப் பேட்டிகளில் அதற்கான காரணத்தையும் வெளியிட்டன. அப்படி பத்திரிகையாளர் சபிதா ஜோசப் அளித்த பேட்டி ஒன்றில் அவர்கள் விவாகரத்துக்கான காரணத்தை கூறி இருக்கிறார். அதன்படி ஆர்த்தியின் அம்மா சுஜாதாவுக்கு சங்கர் என்ற வளர்ப்பு மகன் உள்ளாராம்.
சுஜாதா நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தை அந்த வளர்ப்பு மகன் தான் நிர்வகித்து வருகிறாராம். அப்படி அண்மையில் ஜெயம் ரவியை வைத்து தங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் படம் பண்ண இருந்த சுஜாதா, தன் வளர்ப்பு மகன் சங்கர் சொல்வதை ரவி கேட்டு நடக்க வேண்டும் என ஆர்டர் போட்டதாகவும், இது ரவிக்கு பிடிக்காமல் அவர் தன் மனைவியிடம் சண்டையிட்டு பின் இது ஈகோ மோதலாக மாறி பிரச்சனை பெரிதாகி இருவரும் பிரிந்துவிட்டதாக கூறி இருக்கிறார்.
அதேபோல் பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டியில் கூறுகையில், ஜெயம் ரவி தன்னுடைய மாமியார் நடிப்பில் கடைசியாக நடித்த சைரன் படம் முதலுக்கு மோசமில்லாமல் தப்பித்ததாகவும், அதன் பின்னர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனாராம் ஜெயம் ரவி. இதையும் அவர் மாமியார் தான் தயாரிப்பதாக இருந்ததாம். அப்படத்திற்காக ரவி ரூ.25 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார்.
ஆனால் அவரது மாமியார், உங்களுக்கு அவ்வளவு மார்க்கெட் இல்லை என சொல்லியும் ரவி கேட்காததால் இறுதியில் கொடுக்க சம்மதித்துவிட்டு, படத்தின் பட்ஜெட்டை குறைக்க சொல்லி இயக்குனருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார் சுஜாதா. அது செட் ஆகாது என சொல்லி பாண்டிராஜ் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். இது ஜெயம் ரவிக்கு தெரியவர, அவர் தன் படவாய்ப்பு பறிபோனதற்கு உன் அம்மா தான் காரணம் என மனைவியிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. அதில் தான் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்ததாக பயில்வான் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்.. 15 வருட திருமண வாழ்க்கை முடிந்தது... மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தது ஏன்? ஜெயம் ரவி விளக்கம்