
இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்கு என... மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. மொழி கடந்து இவரது பாடல்களை ரசிப்பவர்களும் ஏராளம். எனவே தான், இளையராஜா வெளிநாடுகளில் மியூசிக் கான்செர்ட் நடத்தினால் அந்த நிகழ்ச்சியின் டிக்கெட் விலை, அதிகம் என்றாலும் அதனை வாங்க வெளிநாட்டை சேர்ந்த ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
1976-ஆம் ஆண்டு வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி... தற்போது வரை சிறகடித்து பறந்து கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா, தன்னுடைய முதல் படத்திலேயே தனித்துவமான இசையால்... ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தவர். எம்.எஸ் .வி-யின் வசீகர இசையை விட, இளையராவின் இசை மாறுபடவே இளவட்ட ரசிகர்கள்... இசைஞானி பாடல்களை அதிகம் கேட்க ஆர்வம் காட்டினர். இளையராஜா குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுக்க இது காரணமாகவும் அமைந்தது.
15 வருட திருமண வாழ்க்கை முடிந்தது... மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்தது ஏன்? ஜெயம் ரவி விளக்கம்
மற்ற தென்னிந்திய மொழி படங்களுக்கு இளையராஜா இசையமைத்த போதிலும்... தன்னுடைய தாய் மொழியில் தான் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். 7 ஸ்வரங்களை மாற்றி மாற்றி போட்டு... தன்னுடைய இசையால் ஏராளாமா மேஜிக் செய்யும் இளையராஜாவின் பாடலை அப்படியே தட்டி தூக்கி, அதே இசையில் வேறு வார்த்தைகளை கோர்த்து போட்டு, மலையாள இயக்குனர் ஒருவர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளதோடு, அந்த பாடலுக்காக ஏராளமான விருதுகளையும் வாங்கியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஆம்... இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கத்தில், ரேவதி, நிழல்கள் ரவி, அரவிந்த் சாமி, ரோகினி ஆகியோர் நடிப்பில் கடந்த, 1993-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மறுபடியும்'. இந்த படம் 1992-ல் வெளியான, 'ஆர்த்' என்கிற ஹிந்தி திரைப்படத்தின் மறு உருவாக்கமாக இயக்க பட்டிருந்தது. முக்கோண காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், நடிகை ரேவதி (துளசி) என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இவர் திருமணத்திற்கு பின் எதிர்நோக்கும் பிரச்னையை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுக்க பட்டிருந்தது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் அல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் நடித்ததற்காக நடிகை ரேவதிக்கு ஏராளமான பாராட்டுக்களும் கிடைத்தது.
தெலுங்கில் அட்டர் பிளாப் ஆன கோட் படம்... காரணம் என்ன? புது குண்டை தூக்கிப்போட்ட வெங்கட் பிரபு
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருந்தார். இவரது இசையில் இடம்பெற்ற, "ஆசை அதிகம் வச்சு" , "நலம் வாழ எந்நாளும்" , "நல்லதோர் வீணை" போன்ற பாடல்கள் நல்ல வரவேற்ப்பை. மேலும் ஆசை அதிகம் வச்சு பாடலை மட்டும் இரவி பாரதி எழுதி இருந்த நிலையில் மற்ற 4 பாடல்களையும் கவிஞர் வாலி எழுதி இருந்தார். இந்த படம் வெளியான சமயத்தில் இளசுகளை குத்தாட்டம் போட வைத்தது, ரோகிணி கவர்ச்சி ஆட்டம் போட்ட 'ஆசை அதிகம் வச்சு' பாடல். இந்த பாடலின் மெட்டைஅப்படியே அட்ட காப்பி அடுச்சு, மலையாள இசையமைப்பாளர் ஒருவர் விருதையும் தட்டி சென்றுள்ளார்.
அதாவது, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலை ஹீரோவாக வைத்து 1994-ஆம் ஆண்டு இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கி இருந்த திரைப்படம் 'தெர்மாவின் கொம்பத்து' என்கிற திரைப்படம். இந்த படத்தில் மோகன் லாலுக்கு ஜோடியாக, ஷோபனா நடித்திருந்தார். நெடுமுடி வேணு, சுகுமாரி, ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் பாடல்களுக்கு பெர்னி மற்றும் இக்னேஷியஸ் இசையமைக்க படத்திற்கு, எஸ்.பி.வெங்கடேஷ் என்பவர் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 'மானம் தெலிங்கே' என்கிற பாடலுக்கு... அப்படியே இளையராஜாவின் 'ஆசை அதிகம் வச்சு' பாடலை மெட்டை அப்பட்டமாக உருவி... வேறு வார்த்தைகள் கோர்த்து, இந்த பாடலை சூப்பர் ஹிட் பாடலாக மாற்றினர் இந்த இரட்டை இயக்குனர்கள். இந்த பாடல் சர்ச்சைகளில் சிக்கியபோதும்... இப்படத்தின் பாடல்களை இசையமைத்த, இரட்டை இயக்குனர்களுக்கு கேரள ஸ்டேட் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மட்டும் 100 கோடி.. ஜெயிலரை ஓரம்கட்டிய தளபதி - வசூல் வேட்டை நடத்தும் GOAT!