இதையடுத்து மகளின் திருமண வரவேற்பை மே 1-ந் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட இயக்குனர் ஷங்கர், அதற்காக பத்திரிக்கை அடித்து திரைப்பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கு கொடுத்து வந்தார். இந்த விழா நடப்பதற்கு ஒரு வாரம் முன்னதாக திடீரென மகளின் திருமண வரவேற்பு நிறுத்தப்படுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் ஷங்கர்.