வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ரியல் ஹீரோ...! நடிகர் சோனு சூட் பிறந்தநாள் இன்று..!

First Published | Jul 30, 2021, 11:28 AM IST

திரைப்படங்களில் வில்லனாக நடித்தாலும், தன்னுடைய தன்னலம் இல்லாத குணத்தால், ஏழை, எளிய, மக்களுக்காக சொத்துக்களை அடமானம் வைத்து பல உதவிகளை, செய்து ரசிகர்கள் மற்றும் மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக மாறிவிட்ட சோனு சூட்டிங் பிறந்தநாள் இன்று...

இவர் வில்லனாக இருந்து ரியல் ஹீரோவாக மாறியது குறித்த சிறு தொகுப்பு இதோ...

நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி, சிம்பு நடித்த ஒஸ்தி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' உள்ளிட்ட படங்களில் முரட்டு வில்லனாக நடித்தவர் சோனு சூட். அதே போல் பல்வேறு ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களிலும் வில்லன் ரோலில் நடித்து மிரட்டியுள்ளார்.
 

இருந்த இடம் தெரியாமல் இருந்த இவரையும், இவருடைய நல்ல மனதையும் அடையாள படுத்தியது கொரோனா காலம் தான்.  திரையில் வில்லனாக இருந்தாலும், கொரோனா காலத்தில் அடுத்தடுத்து இவர் செய்த உதவிகளால் நிஜத்தில்  ஹீரோ என்பதை நிரூபித்துவிட்டார். 
 

Tap to resize

సోనూసూద్‌కు పూలదండ వేసి స్వాగతం పలుకుతున్న హోటల్ యజమాని, స్థానికులు

குறிப்பாக கொரோனா லாக்டவுன் காலத்தில், தங்களது சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் தவித்து கொண்டிருந்த  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல் நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார். 

இவரது வருமானமே அந்த ஒட்டு மொத்த குடும்பத்தையும் காப்பாற்றி வந்த நிலையில், இவரது மனைவி மற்றும் நான்கு பெண் குழந்தைகளும் குடும்பத் தலைவர் ஆலம் சிங் புண்டிர் என்பவரை இழந்து தவித்தனர்.

அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்ததோடு, தற்போது வரை தன்னுடைய உதவிகளை தொடர்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்தடுத்து உதவி கேட்போருக்கு கொடுப்பதற்காக தனது பெயரிலும், மனைவி சோனாலி பெயரிலும் உள்ள 2 கடைகள் 6 குடியிருப்புகள் என மொத்தம் 8 சொத்துக்களை 10 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.
 

அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி மக்கள் சேவையில் தீவிரமாக இறங்கியுள்ளதால் சோனு சூட்டை மக்கள் ரியல் ஹீரோவாக பார்ப்பதால், அவரை பல படங்களில் ஹீரோவாக நடிக்க வைக்கவும் சில முயற்சித்து வருகிறார்கள். அதே போல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் திரும்பவும் பிஸியாகியுள்ளார்.
 

इस साल कोरोना में लगे लॉक डाउन के दौरान एक्टर सोनू सूद की काफी तारीफ हुई।उन्होंने कई लोगों को लॉकडाउन के दौरान फंसे होने से निकाला। मजबूर लोगों की मदद कर सोनू सूद मसीहा बन गए। इस वजह से उनकी इस साल काफी चर्चा हुई।

தன்னலம் கருதாது எளிய மக்கள் கஷ்டத்தில் உள்ளதை அறிந்தால், கூடுமான வரையில், அவர்களின் தேவையை பூர்த்தி செய்வது, கிராமங்களுக்கு தண்ணீர் வசதி, செல் போன் டவர் அமைத்து ஆன்லைன் படிப்புக்கு உதவியது என இவரது நல்ல மனதை கண்டு சில ரசிகர்கள் சோனு சூட்டுக்கு கோவில் கூட கட்டி உள்ளனர்.
 

மேலும் இவரை கௌரவிக்கும் விதமாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களுடைய 747 விமானத்தில் சோனுசூட்டின் பிரம்மாண்டமான போஸ்டரை ஒட்டியும் சிறப்பித்துள்ளது. இப்படி ஒரு சிறப்பை பெறும் முதல் இந்திய நடிகர் சோனு சூட் தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இப்படித்தான் ரீலில் வில்லனாக நடித்தாலும், ரியலில் ஹீரோவாக வாழ்த்து வரும் சோனு சூட்... இன்று தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது ரசிகர்களும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!