மகாலட்சுமி செய்த செயல்..? போட்டோ போட்டு மானத்தை வாங்கிய கணவர் ரவீந்தர்..!

Published : Nov 06, 2022, 02:56 PM IST

மகாலட்சுமி லட்சுமி செய்த செயலை... போட்டோ எடுத்து போட்டு, கிண்டலாக சில கேப்ஷனுடன்... அவரின் மானத்தை வாங்கியுள்ளார் காதல் கணவர் ரவீந்தர்..  

PREV
16
மகாலட்சுமி செய்த செயல்..? போட்டோ போட்டு மானத்தை வாங்கிய கணவர் ரவீந்தர்..!

'அன்பே வா' சீரியலில் முரட்டு வில்லியாக நடித்து வரும் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி, கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் என்பதால், திருப்பதியில் மிகவும் எளிமையாக இவர்கள் திருணம் நடந்தது. இவர்களின் திருமண புகைப்படம் வெளியான போது கூட, பலர் இது படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட புகைப்படமா? என சந்தேக கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

26

இந்த ஆண்டு நடந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருமணத்தை தொடர்ந்து, திரையுலகினராலும், ரசிகர்களும் அதிகமாக பேசப்பட்டது என்றால் அது ரவீந்தர் - மகாலட்சுமி ஜோடியின் திருமணம் தான்.

Alia Bhatt: ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு குழந்தை பிறந்தது..! குவியும் வாழ்த்து..!

36

திருமணம் ஆனதில் இருந்து, தனி ஜெட்டில் ஹனி மூன், குலதெய்வ கோயில் வழிபாடு, ஃபாரின் ட்ரிப் என படு குஷியாக இருக்கும் இந்த ஜோடி, அவ்வபோது மிகவும் ரொமான்டிக் புகைப்படங்கள் சில வற்றையும் வெளியிட்டு, தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் ஷேர் செய்து வருகின்றனர்.
 

46

அந்த வகையில் தற்போது மனைவி மகாலட்சுமியை கிண்டல் செய்யும் விதமாக, அவர் சமைத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, மகாலட்சுமியின் மானத்தையே வாங்கி உள்ளார் ரவீந்தர்.  மகாலட்சுமி முட்டை அவித்த போது தண்ணீர் எல்லாம் சுன்றி முட்டையே கருகிவிட்டது. இதனை போட்டோ எடுத்து போட்டு மரண கலாய் கலாய்த்துள்ளார் ரவீந்தர். மேலும் தன்னுடைய மனைவியை சூப்பர் குக் என கிண்டல் செய்வது போல் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

நடிகை த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு..! கட்டோடு வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!

56

சுமார் ஒன்றரை வருடம், ரகசியமாக மகாலட்சுமி - ரவீந்தர் ஜோடி காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருப்பதியில் மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டனர். இது இவர்கள் இருவருக்குமே மறுமணம் என்பது குறிப்பிடத்தக்கது. மகாலட்சுமிக்கு சச்சின் என்கிற மகன் ஒருவரும் உள்ளார்.

66

திருமணத்தைத் தொடர்ந்து பல்வேறு ஊடகங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் பேட்டி அளித்த இந்த ஜோடிகள்... விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். திருமணம் ஆனதில் இருந்தே மனைவிக்கு சில இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் ரவீந்தர், சமீபத்தில் சுமார் 35 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வழங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே..

பிறந்தநாள் செலிப்ரேஷனுக்கு தயாரான உலக நாயகன்! பலூனை கண்டதும் குழந்தையாகவே மாறி விளையாடிய கமல் போட்டோஸ்!

click me!

Recommended Stories