இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளேன்... திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த பின் யோகிபாபு சொன்ன குட் நியூஸ்

Published : Nov 06, 2022, 01:40 PM IST

இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற நகைச்சுவை நடிகர் யோகிபாபு, அங்கு போட் படக்குழுவினருடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார்.

PREV
14
இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளேன்... திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த பின் யோகிபாபு சொன்ன குட் நியூஸ்

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வந்துகொண்டிருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத தமிழ் படங்கள் இல்லை என சொல்லும் அளவுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்வரை வார வாரம் இவர் நடித்த படங்கள் ஏதாவது ரிலீசாகி விடும். ஆனால் இவர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பின்னர் காமெடி வேடங்களில் நடிப்பதை சற்று குறைத்துக்கொண்டார். முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடிக்கவே முனைப்பு காட்டி வருகிறார்.

24

மறுபுறம் யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்கும் படங்களுக்கும் மவுசு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணம் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான மண்டேலா படம் அமோக வரவேற்பை பெற்றதோடு மட்டுமின்றி 2 தேசிய விருதுகளையும் வென்றது. தற்போது யோகிபாபு பொம்மை நாயகி எனும் படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை பா.இரஞ்சித் தயாரித்து உள்ளார்.

இதையும் படியுங்கள்...  எவ்ளோ சொல்லியும் கேட்காத ஹவுஸ்மேட்ஸ்.. ரெட் கார்டு கொடுக்க முடிவெடுத்த கமல்ஹாசன் - பரபரக்கும் புரோமோ இதோ

34

இந்நிலையில், இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் ‘போட்’ படக்குழுவினருடன் இணைந்து சாமி தரிசனம் செய்த யோகிபாபு அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடிப்பதை உறுதிசெய்த அவர், அத்துடன் மேலும் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

44

அதன்படி தான் விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளதை உறுதி செய்தார். காமெடி கதையம்சம் கொண்ட படத்தை விரைவில் இயக்க உள்ளதாக யோகிபாபு தெரிவித்தார். அதற்கான கதை, திரைக்கதை ஆகியவற்றை தயாராக வைத்துள்ளதாகவும், தயாரிப்பாளர் உறுதியானதும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என குட் நியூஸ் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்...  படத்தின் மொத்த பட்ஜெட்டையும் இரண்டே நாளில் தட்டித்தூக்கிய லவ் டுடே... 2-ம் நாள் வசூல் நிலவரம் இதோ

click me!

Recommended Stories