Alia Bhatt: ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடிக்கு குழந்தை பிறந்தது..! குவியும் வாழ்த்து..!

First Published | Nov 6, 2022, 1:13 PM IST

இன்று காலை பிரசவ வலியோடு மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகை ஆலியா பட்டுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

பாலிவுட் திரை உலகில், முன்னணி நடிகையாக இருப்பவர் அலியா பட். இவர் கடந்த சில வருடங்களாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து வந்த நிலையில், இவர்களுடைய திருமணம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மிகப் பிரமாண்டமாக நடந்தது. இவர்களுடைய திருமணத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திய நிலையில், திருமணம் ஆன இரண்டே மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டார் ஆலியா.
 

மேலும் திருமணத்திற்கு பின்னர் எந்த திரைப்பட வாய்ப்புகளையும் ஏற்காத ஆலியாபட் திருமணத்திற்கு முன்பே 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் அவ்வப்போது தன்னுடைய கணவருடன் வெளியிடங்களுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்த ஆலியா பட், சில பிரக்னன்சி போட்டோ ஷூட்களையும் நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். 

நடிகை த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு..! கட்டோடு வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!
 

Tap to resize

இந்நிலையில் ஆலியா பட் இன்று காலை பிரசவ வலியுடன், மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், சற்று முன்னர் இந்த ஜோடிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இந்த நட்சத்திர ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 

இந்த ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஆர் ஆர் ஆர் படத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக சீதா என்கிற கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

பிறந்தநாள் செலிப்ரேஷனுக்கு தயாரான உலக நாயகன்! பலூனை கண்டதும் குழந்தையாகவே மாறி விளையாடிய கமல் போட்டோஸ்!

Latest Videos

click me!