ராதிகாவின் அதிர்ச்சி முடிவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..! 'சித்தி 2 ' சீரியல் குறித்து அதிரடி பதிவு..!

Published : Feb 11, 2021, 07:56 PM IST

நடிகை ராதிகா தான் நடித்து வரும் 'சித்தி 2 ' சீரியல் குறித்து அதிர்ச்சி பதிவு போட்டுள்ளது ரசிகர்களை, இந்த சீரியலை இவருக்காக பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றமடைய வைக்கும் விதத்தில் உள்ளது.  

PREV
111
ராதிகாவின் அதிர்ச்சி முடிவால் ஏமாற்றத்தில் ரசிகர்கள்..! 'சித்தி 2 ' சீரியல் குறித்து அதிரடி பதிவு..!

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தில் பாஞ்சாலியாக நடித்தவரா இது? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் மிளிர்ந்தார். 

211

80 களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த ராதிகா, தற்போது வரை வெள்ளித்திரையில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். லாக்டவுனுக்கு முன்னதாக சரத்குமாருடன் ராதிகா நடித்த “வானம் கொட்டட்டும்” படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

311

ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராதிகா, சித்தி, அண்ணாமலை, அரசி, அண்ணாமலை, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி, சித்தி 2 என வரிசையாக சூப்பர் ஹிட் சீரியல்களை தயாரித்து வருகிறார். 

411

வழக்கமான சீரியல்களைப் போல் இல்லாமல் தைரியமான பெண்ணாக ராதிகா நடிக்கும் கதாபாத்திரத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற கதையையே சித்தி தொடர் மாற்றியது. பிரைம் டைமில் சன் தொலைக்காட்சியில் வெளியான சித்தி சீரியலுக்கு ஆண்கள் பட்டாளமும் அடிமையாக இருந்ததை மறந்துவிட முடியாது. 

511

 இந்நிலையில் இவர் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரை, கடந்த 2001 ஆம் ஆண்டு இதே நாளில் தான் திருமணம் செய்து கொண்டு, சமீபத்தில் தான் தன்னுடைய 20 ஆண்டு திருமண நாளை கொண்டாடி மகிழ்ந்தனர் ராதிகா - சரத்குமார் ஜோடிகள்.

611

மேலும் கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகிக்கும் ராதிகா, மெல்ல சின்னத்திரையில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். சமீபத்தில் கணவருடன் சூறாவளி பிரச்சாரமும் மேற்கொண்டார்.

711

radhika

radhika

811

இன்று கடைசி தினமாக ஷூட்டிங்கில் கலந்து கொண்ட இவருக்கு அனைவரும் புன்னகையோடு வழியனுப்பியுள்ளனர்.

911

இதுகுறித்து அவர் கூறுகையில்,  ’சித்தி 2’ என்ற மெகா சீரியலில் இருந்து நான் வெளியேறும் முடிவை எடுத்தது மகிழ்ச்சி மற்றும் வருத்தம் ஆகிய இரண்டு சாயலும் கலந்த ஒரு மனநிலையில் இருந்தேன். 

1011

எனது இத்தனை ஆண்டுகளில் மிகச் சிறந்த மற்றும் கடினமான உழைப்பை கொடுக்கும் சீரியல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 

1111

என்னுடன் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சக நடிகர் நடிகைகளுக்கும் குட் பை என சொல்வது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்த சீரியலின் முக்கிய கேரக்டர்களான கவின், வெண்பா, யாழினி கேரக்டர்களில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். எனினும் இவருக்காகவே இந்த சீரியலை பார்க்கும் பல ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
click me!

Recommended Stories