குடும்பத்துடன் மேளம் தாளத்தோடு சென்று பாஜகவில் இணைந்தார் சிவாஜியின் மகன் ராம்குமார்..!

First Published | Feb 11, 2021, 5:30 PM IST

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் மற்றும் பேரன் ஆகியோர்... குடும்பத்துடன் மேளம் தாளத்தோடு சென்று பாஜக கட்சியில் இணைத்துள்ளனர்.
 

நேற்று தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை நடிகர் ராம்குமாரும், அவருடைய மகன் துஷ்யந்தும் சந்தித்தனர். இன்று தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளது குறித்து ஆலோசனை நடந்ததாகவும் கூறப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராம்குமார், தன்னுடைய ஆதரவாளர்கள் சிலருடன் பாஜகவில் இணைய உள்ளதை உறுதி செய்தார். அரசியல் என்பது கரடுமுரடான பாதை, அதில் எதிர்ப்பு வருவது என்பது இயல்பான ஒன்று. பாஜக தான் தமிழகத்தின் எதிர்காலம் எனக்கூறினார்.
Tap to resize

குஜராத்தில் முதலமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே நான் மோடியின் ரசிகன். அவரை நீண்ட வருடங்களாக கவனித்து வருகிறேன். குஜராத்திலும், பாஜகவிலும் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள் அவரால் ஈர்க்க பட்டே பாஜகவில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று 4 மணியளவில், குடும்பத்தினருடன் மேளம் தாளங்கள் முழங்க, கமலாலயத்தில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
இதில் குஷ்பு உள்ளிட்ட, பாஜக கட்சியை சேர்ந்த பலர் உடன் இருந்தனர்.

Latest Videos

click me!