சமந்தா... காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ராஷ்மிகா! எதில் தெரியுமா?

Published : Aug 09, 2021, 07:51 PM IST

தென்னிந்தியா நடிகைகளில், அதிக ஃபாலோவர்சை சமூக வலைத்தளத்தில் பெற்ற நடிகையாக சாதனை படைத்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. இதன் மூலம், சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன் போன்ற நடிகைகளே பின்னுக்கு சென்றுள்ளனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.  

PREV
17
சமந்தா... காஜல் அகர்வாலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த ராஷ்மிகா! எதில் தெரியுமா?

கன்னட திரையுலகில் அறிமுகமான ஐந்து வருடங்களுக்குள், தெலுங்கு, தமிழ் மற்றும் தற்போது பாலிவுட் திரையுலகிற்கும் சென்று விட்டார் ராஷ்மிகா.

27

 தனது திறமையான நடிப்பு, கியூட் ரியாக்ஷன்ஸ், அழகு, அளவான கவர்ச்சி என அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென தனி இடத்தை உருவாக்கி விட்டார். 

37

சமீபத்தில், பாட்ஷா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின்  “டாப் டக்கர்” ஆல்பம் பாடல் அதிக நபர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.

47

மேலும் தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் மூலம் அறிமுகமான இவரை, அடுத்தடுத்த பல படங்களில் கமிட் செய்ய பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டு வருவதாக, கோலிவுட் திரையுலகில் பரவலாக பேச்சு அடிபட்டு வருகிறது.

57

தெலுங்கில் புஷ்பா படத்தில் நடித்துள்ள இவர், பாலிவுட் படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். மேலும் பிரபல தமிழ் ஹீரோ படத்தில் நடிக்க இவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

67

இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் இவரை 20 மில்லியன் ஃபாலோவர்ஸ் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். தென்னிந்திய நடிகைகளில் அதிக ஃபாலாவேர்ஸ் வைத்துள்ள நடிகை என்கிற சாதனையை இவர் படைத்துள்ளார்.

77

இவருக்கு அடுத்ததாக, நடிகை காஜல் அகர்வாலை 1.92 கோடி ஃபாலோவரஸ்சுகளையும், சமந்தாவை 1.8 கோடி ஃபாலாவர்ஸ் , ரகுல் ப்ரீத் சிங்கை 1.73 கோடி ஃபாலோவர்ஸ், மற்றும் ஸ்ருதிஹாசனை 1.72 கோடி ஃபாலோவர்ஸ் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories