Published : Dec 18, 2021, 08:26 PM ISTUpdated : Dec 18, 2021, 08:27 PM IST
புஷ்பா (Pushpa) படத்தில் 5 நிமிட பாடலுக்கு மட்டும் ஆடிய சமந்தாவுக்கு (Samantha) கிடைக்கும் வரவேற்பு, படம் முழுக்க வரும் தனக்கு கிடைக்கவில்லையே என ராஷ்மிகா (Rashmika) செம அப்செட்டில் இருக்கிறாராம்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது.
27
செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
37
புஷ்பா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. நேற்று ஒரு நாள் மட்டும் உலகளவில் இப்படம் 71 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம்.
47
இப்படத்தின் கதை சொதப்பலாக இருந்தாலும், அல்லு அர்ஜுனின் வித்தியாசமான நடிப்பு, பகத் பாசிலின் வில்லத்தனம், சமந்தாவின் ஐட்டம் பாடல் ஆகியவை படத்திற்கு பிளஸ்சாக அமைந்துள்ளது.
57
புஷ்பா படத்தில் 5 நிமிடம் மட்டுமே வரும் சமந்தாவின் ஐட்டம் பாடலை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். ஆனால் இப்படத்தின் ஹீரோயின் ராஷ்மிகாவிற்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் வரவில்லை.
67
5 நிமிட பாடலுக்கு மட்டும் ஆடிய சமந்தாவுக்கு கிடைக்கும் வரவேற்பு, படம் முழுக்க வரும் தனக்கு கிடைக்கவில்லையே என ராஷ்மிகா செம அப்செட்டில் இருக்கிறாராம்.
77
சமந்தாவின் கவர்ச்சி அலையில் நடிகை ராஷ்மிகாவின் பெயர் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்பது தான் ரசிகர்கள் பலரது கருத்தாக உள்ளது.