ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்த தி கேர்ள் ஃபிரண்ட் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் லைஃப் டைம் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
தென்னிந்தியாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. குறுகிய காலத்திலேயே பான் இந்திய அளவில் முக்கிய இடத்தைப் பிடித்தார். 'நேஷனல் க்ரஷ்' என்ற பட்டத்தையும் பெற்றார். ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்த 'தி கேர்ள் ஃபிரண்ட்' திரைப்படம் கடந்த மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆன நிலையில், தற்போது ஓடிடி வெளியீட்டிற்குத் தயாராகி உள்ளது. அப்படத்தின் உலகளாவிய வசூல் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.
24
தி கேர்ள் ஃபிரண்ட் ஓடிடி ரிலீஸ்
'தி கேர்ள் ஃபிரண்ட்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் மூலம் ஓடிடியில் வெளியாகிறது. டிசம்பர் 5 ஆம் தேதி முதல் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீக்ஷித் ஷெட்டி இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா மற்றும் தீக்ஷித் ஷெட்டி இடையேயான ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி படத்தில் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தை ராகுல் ரவீந்திரன் இயக்கியுள்ளார். இப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வந்தது.
34
தி கேர்ள் ஃபிரண்ட் படத்தின் வசூல்
ராஷ்மிகா மந்தனா நடித்த இப்படம் இந்தியாவில் 17 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து உள்ளது. இதன் உலகளாவிய வசூல் 29 கோடியாம். வசூல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.42 கோடி என கூறப்படுகிறது. இதில் ஒரு பாடல் காட்சி மட்டும் 1 கோடி செலவில் எடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கீதா ஆர்ட்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் அல்லு அர்விந்த் வழங்குகிறார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சோட்டா கே பிரசாத் மேற்கொண்டுள்ளார். தியேட்டரில் சொதப்பிய இப்படம் ஓடிடி வெளியீட்டிற்கு பின் அமோக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.