தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை விஜய் தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். இது அவரது கடைசி படம். தளபதி63 என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ஜன நாயகன் என்று அதிகாரப்பூர்வ டைட்டில் வைக்கப்பட்டது. இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், பிரியாமணி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.