இப்போ காசு.. பணம் எல்லாம் இருக்கு... ஆனா! சிறுவயதில் பட்ட கஷ்டங்களை பற்றி பேசி கலங்கிய ராஷ்மிகா

Published : Nov 16, 2022, 11:58 AM ISTUpdated : Nov 16, 2022, 11:59 AM IST

சிறுவயதில் பொம்மை வாங்க கூட காசில்லாமல் ஏங்கிய நிலை குறித்து வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனா பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

PREV
14
இப்போ காசு.. பணம் எல்லாம் இருக்கு... ஆனா! சிறுவயதில் பட்ட கஷ்டங்களை பற்றி பேசி கலங்கிய ராஷ்மிகா

தெலுங்கு படங்களில் நடித்து பாப்புலர் ஆன நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் கைவசம் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல்வேறு மொழி படங்கள் உள்ளன. நடிகை சமந்தா சமீப காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதால், அவர் நடிக்க மறுக்கும் பட வாய்ப்புகள் எல்லாம் ராஷ்மிகாவுக்கு தான் செல்கிறது.

24

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்த ராஷ்மிகா, அதன்பின் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். வம்சி இயக்கியுள்ள இப்படம் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதுதவிர தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் ராஷ்மிகா.

இதையும் படியுங்கள்... அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு... ராஜா ராணியாக ரவுசு காட்டும் ராபர்ட் - ரச்சிதா! வைரலாகும் புரோமோ

34

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா காதல் சர்ச்சைகளிலும் சிக்கியதுண்டு. நடிகர் விஜய் தேவரகொண்டாவை இவர் காதலிப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வதந்திகள் பரவிய வண்ணம் இருந்தன. சமீபத்தில் தன்னைப்பற்றிய நெகடிவ் விமர்சனங்கள் குறித்தும், காதல் சர்ச்சைகள் குறித்து மனம் திறந்துபேசியிருந்த ராஷ்மிகா, தற்போது சிறுவயதில் தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

44

அதில் அவர் கூறியதாவது : “சிறுவயதில் எனது பெற்றோரிடம் பணம் இருக்காது, குடும்பத்தில் அவ்ளோ கஷ்டம் இருக்கும். இரு மாதங்களுக்கு ஒரு வீடு மாறும் அளவுக்கு மிகவும் கஷ்டப்பட்டோம். அந்த கஷ்டத்திலும் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து என் பெற்றோர் என்னை வளர்த்தனர். ஒரு பொம்மை வாங்க கூட எங்களிடம் காசு இருக்காது. அதற்காக நான் மிகவும் ஏங்கி இருக்கிறேன்” என எமோஷனலாக பேசி உள்ளார் ராஷ்மிகா. 

இதையும் படியுங்கள்... சாண்டி மாஸ்டரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த முன்னாள் மனைவி காஜல்... வைரலாகும் புகைப்படங்கள்

Read more Photos on
click me!

Recommended Stories