விடாது கருப்பாய் துரத்தும் இரவின் நிழல் சர்ச்சை... எமோஷனல் ஆன இயக்குனர் பார்த்திபன்

Published : Nov 16, 2022, 09:45 AM IST

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இரவின் நிழல் திரைப்படம் ரிலீசானபோது, அதில் இது உலகின் இரண்டாவது சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.  

PREV
15
விடாது கருப்பாய் துரத்தும் இரவின் நிழல் சர்ச்சை... எமோஷனல் ஆன இயக்குனர் பார்த்திபன்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டவர் பார்த்திபன். சமீபகாலமாக இவரின் படைப்புகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு இவர் இயக்கி இவர் மட்டுமே படம் முழுக்க நடித்திருந்த ஒத்த செருப்பு படம், உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனை மிஞ்சும் வகையில் அவர் எடுத்த படம் தான் இரவின் நிழல்.

25

இப்படத்த ஒரே ஷாட்டில் படமாக்கி இருந்தார். உலகிலேயே நான் லீனியர் முறையில் படமாக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் இரவின் நிழல் என பார்த்திபன் வெளிப்படையாக விளம்பரம் செய்தார். ஆனால் இது முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமில்லை எனவும், பார்த்திபன் சொல்வது பொய் என்றும் தொடர்ந்து மல்லுக்கட்டி வந்தார் ப்ளூ சட்டை மாறன்.

35

சமீபத்தில் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானபோது கூட அதில் இது உலகின் இரண்டாவது சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனைப் பார்த்து மனமுடைந்து போன பார்த்திபன், அப்படம் குறித்து எமோஷனலாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... திருமணம் நெருங்கும் நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

45

அதில் அவர் கூறியதாவது : “இரவின் நிழல் திரைப்படம் யாருக்கும் தெரியாமலே, எந்தவித புரமோஷனும் இல்லாமலே அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. அதில் உள்ள கமெண்ட்ஸில் எனக்கு சுத்தமாக உடன்பாடு இல்லை. அதனை மாற்ற முடியுமா என்பது தெரியவில்லை. தொட்டி நிறைய பாலில் கலந்த ஒரு சொட்டு விஷம் மாதிரி எதிர்மறை விமர்சனங்கள், மிகப்பெரிய படைப்பைக் கூட கஷ்டப்படுத்திவிடுகிறது.

55

இது உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. அதனை ஒவ்வொன்றாக வெளியிடுவேன். இது யோக்கியமானது என்பதை நிரூபிப்பது தான் ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். வெகுவாரியான ரசிகர்கள் என்னை சப்போர்ட் பண்ணவில்லை என்றால் இப்படி ஒரு முயற்சியை என்னால் செய்திருக்க முடியாது. நன்றி” என அந்த வீடியோவில் பார்த்திபன் உருக்கமாக பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... பட்ஜெட்டை விட 10 மடங்கு அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் ‘லவ் டுடே’ படத்தின் 12 நாள் வசூல் நிலவரம்

click me!

Recommended Stories