திருமணம் நெருங்கும் நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் ரசிகர்கள்

First Published | Nov 16, 2022, 9:04 AM IST

திருமணத்திற்கு இரண்டு வாரங்களே எஞ்சி உள்ள நிலையில், நடிகை மஞ்சிமா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது பழைய புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி உள்ளார். 

மலையாள நடிகையான மஞ்சிமா மோகன், கடந்த 2016-ம் ஆண்டு சிம்பு - கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அழகாலும், நடிப்பாலும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த இவருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்து வந்தன.

அதன்படி முத்தையா இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த தேவராட்டம் படத்தில் நடித்தபோது கவுதம் கார்த்திக்கிற்கும் மஞ்சிமா மோகனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அப்போதிலிருந்து சீக்ரெட் ஆக காதலித்து வந்த இந்த ஜோடி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையும் படியுங்கள்... அரியவகை நோய் பாதிப்பு... 44 வயதில் உயிரிழந்த பிரபல ஒளிப்பதிவாளர் - திரையுலகினர் அதிர்ச்சி

Tap to resize

அத்துடன் தாங்கள் திருமணம் செய்துகொள்ள உள்ள தகவலையும் வெளியிட்டனர். வருகிற நவம்பர் 28-ந் தேதி இவர்களது திருமணம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது நடிகை மஞ்சிமா மோகன் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

திருமணத்திற்கு இரண்டு வாரங்களே எஞ்சி உள்ள நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது பழைய புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி உள்ளார். அத்துடன் அதற்கான காரணத்தையும் அவர் கூறி இருக்கிறார். அதன்படி இன்ஸ்டாகிராம் மக்களுடன் இணைந்திருப்பதற்கு சிறந்த இடமாக இருந்து வருகிறது. நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன் என்பது குறித்து வருத்தப்படுவதற்கான இடம் அது இல்லை என்பதால் அதிலிருந்து என் பழைய புகைப்படங்களை நீக்கிவிட்டேன். இனி முதலில் இருந்து தொடங்க உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... பட்ஜெட்டை விட 10 மடங்கு அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் ‘லவ் டுடே’ படத்தின் 12 நாள் வசூல் நிலவரம்

Latest Videos

click me!