நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடைசியாக வாரிசு படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் ராஷ்மிகா. இதில் அவருக்கு பெரிய அளவு ஸ்கோப் இல்லாமல் இருந்தாலும், விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படத்தில் நடித்ததாக சமீபத்திய பேட்டியிலும் ராஷ்மிகா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அனிமல், புஷ்பா 2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள ராஷ்மிகா, சமீபத்தில் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அதுவும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் தான் ராஷ்மிகா துபாய்க்கு சென்றிருக்கிறார். இந்த சீக்ரெட் டிரிப்பின் போது துபாயில் இருவரும் ஜோடியாக சுற்றியபோது எடுத்த புகைப்படம் லீக் ஆகி வைரலாகி வருகிறது.