உடல்நலம் குறித்து ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லி... பிச்சைக்காரன் 2 அப்டேட்டையும் வெளியிட்ட விஜய் ஆண்டனி

Published : Feb 02, 2023, 12:57 PM IST

மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங்கின் போது விபத்தில் சிக்கி படு காயம் அடைந்த விஜய் ஆண்டனி, தற்போது தன் உடல்நலம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

PREV
14
உடல்நலம் குறித்து ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லி... பிச்சைக்காரன் 2 அப்டேட்டையும் வெளியிட்ட விஜய் ஆண்டனி

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி, தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்றது.

24

அப்போது பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டபோது கப்பலின் மீது விஜய் ஆண்டனி ஓட்டிய ஜெட்ஸ்கீ மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து படக்குழுவினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் உயர்மட்ட சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்ட விஜய் ஆண்டனிக்கு சில அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன.

இதையும் படியுங்கள்... இயக்குனர் மட்டுமல்ல... ஏகே 62 படத்தின் இசையமைப்பாளரும் மாற்றம்...! அனிருத்துக்கு பதில் இவரா?

34

இதையடுத்து கடந்த வாரம் தான் படிப்படியாக குணமாகி வருவதாக மருத்துவமனையில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதைப்பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில், தற்போது தனது உடல்நலம் குறித்து குட் நியூஸ் ஒன்றை சொல்லி உள்ளார் விஜய் ஆண்டனி.

44

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “அன்பு இதயங்களே, நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... 2 படம் ஹிட் ஆனதும்... சம்பளத்தை மளமளவென உயர்த்திய சிம்பு..! தெறித்தோடும் தயாரிப்பாளர்கள்

Read more Photos on
click me!

Recommended Stories