மாடர்ன் சிலுக்கு... சில்க் ஸ்மிதாவாக மாறி கவர்ச்சியில் கிக் ஏற்றும் பிக்பாஸ் நடிகை - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

Published : Feb 02, 2023, 11:11 AM ISTUpdated : Feb 02, 2023, 11:16 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தெலுங்கு நடிகை திவி, சில்க் ஸ்மிதாவை போல் உடையணிந்து நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

PREV
17
மாடர்ன் சிலுக்கு... சில்க் ஸ்மிதாவாக மாறி கவர்ச்சியில் கிக் ஏற்றும் பிக்பாஸ் நடிகை - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் திவி வத்யா. இவர் வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற மஹரிஷி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் அவர் சின்ன ரோலில் தான் நடித்து இருந்தார்.

27

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் திவி. அந்நிகழ்ச்சியில் பரபரப்பான போட்டியாளராக பேசப்பட்ட திவி பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டாலும், அதன்மூலம் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தார்.

37

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திவிக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. குறிப்பாக கடந்தாண்டு சிரஞ்சீவி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்கு படமான காட்ஃபாதரிலும் திவி முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

47

தற்போது இராண்டாவது முறையாக சிரஞ்சீவியுடன் கூட்டணி அமைத்துள்ள திவி, அவரின் போலா ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். இதில் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும்.

இதையும் படியுங்கள்... 2 படம் ஹிட் ஆனதும்... சம்பளத்தை மளமளவென உயர்த்திய சிம்பு..! தெறித்தோடும் தயாரிப்பாளர்கள்

57

இப்படி தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக விளங்கும் திவி, சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இயங்கி வருகிறார். விதவிதமான கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதையும் அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

67

அந்த வகையில், தற்போது சில்க் ஸ்மிதா போல் சேலையில் இடுப்பழகு தெரிய செம்ம கவர்ச்சியாக நடிகை திவி நடத்தியுள்ள போட்டோஷூட்டின் புகைப்படங்கள் தான் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன.

77

மெல்லிய இடை அழகை காட்டி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை திவியின் புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவர் அச்சு அசல் சில்க் ஸ்மிதா போல் இருப்பதாக பாராட்டி வருகின்றனர். திவியின் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... லிங்குசாமியின் ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்...? ஹீரோ கார்த்தி இல்லையாம்

click me!

Recommended Stories