லிங்குசாமியின் ‘பையா 2’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்...? ஹீரோ கார்த்தி இல்லையாம்

First Published | Feb 2, 2023, 9:15 AM IST

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பையா படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் பையா. கார்த்தி நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். பெங்களூரில் இருந்து மும்பை வரையிலான கார் பயணத்தின் போது ஏற்படும் காதலை அழகாகவும், எதார்த்தமாகவும் காட்சிப்படுத்தி இருந்தார் லிங்குசாமி. கார்த்தி - தமன்னா இடையேயான கெமிஸ்ட்ரியும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

இப்படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு முக்கியமான காரணம் யுவன் சங்கர் ராஜா. அவரின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அதில் இடம்பெறும் அடடா மழைடா பாடல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடலாக அமைந்தது. இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது.

இதையும் படியுங்கள்... தளபதி 67-ல் நடிக்கும் இந்தக் குழந்தை பிரபல நடிகரின் மகளா..! சர்ப்ரைஸ் தகவலை சந்தோஷமாக வெளியிட்ட தந்தை

Tap to resize

இந்நிலையில், தற்போது 13 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பையா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க லிங்குசாமி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றி பெற்றதால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்க முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இதில் டுவிஸ்ட் என்னவென்றால் முதல் பாகத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்த கார்த்தி - தமன்னா இப்படத்தில் நடிக்கவில்லை என்பதுதான். அவர்களுக்கு பதிலாக ஆர்யா, பையா இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தின் மூலம் ஜான்வி கபூர் கோலிவுட்டில் காலடி எடுத்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ஷூட்டிங்கை முழுக்க முழுக்க துபாயில் நடத்த திட்டமிட்டு உள்ளாராம் லிங்குசாமி. ஜான்வி கபூர் நடிப்பதால் இதனை பான் இந்தியா படமாக வெளியிடவும் வாய்ப்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

இதையும் படியுங்கள்... வாத்தி பட இயக்குனர் திருமணம்... கிளாமர் உடையில் வந்து கலந்துகொண்டு ஷாக் கொடுத்த கீர்த்தி சுரேஷ் - வைரல் போட்டோ

Latest Videos

click me!