நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் மன்சூர் அலிகான், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் மேத்யூ, நடிகை பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கிறது. லலித் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.