4 வருடங்களுக்கு மேலாக, ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல்... எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியாமல், பல்வேறு ட்விட்டுகளோட 'பாரதி கண்ணம்மா' சீரியலை இயக்கி வந்தார் இயக்குனர் பிரவீன் பென்னட் . ஆனால் ஒரு வழியாக தற்போது இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ள நிலையில் இந்த சீரியலில் இரண்டாம் பாகம் எடுக்கப்பட உள்ள தகவலும் வெளியாகியுள்ளது.